Coldplay இசை நிகழ்ச்சியில் ஷாக்; கிஸ் கேமில் சிக்கிய CEO; ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் சொல்வது என்ன?
ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆண்டி பைரன் மற்றும் மனித வளத்துறை அலுவலர் கிறிஸ்டின் கபோட் Coldplay இசை நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்ட வீடியோ வைரலாகியிருப்பது நிறுவனத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதனால், நிறுவனம் இருவருக்கும் விடுமுறை அளித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்திக்குக் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
"ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் எங்களை வழிநடத்திய கலாசாரத்தில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். நமது தலைவர்கள் நடத்தை மற்றும் அதற்கான பொறுப்புக்கூறலில் தரத்தைக் காப்பார்கள் என நம்புகிறோம்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், "இந்த விஷயத்தில் இயக்குநர்கள் குழு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விரைவில் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்வோம்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“I’m willing to be accountable… but how dare you film me cheating on my wife even though I literally signed a media release when I bought these tickets.”
— Kyree (@Kyreeoliver) July 17, 2025
The audacity of Andy Byron is hilarious.
This Astronomer CEO got caught cuddling his HR chief on the Coldplay kiss cam and… pic.twitter.com/HBo96gdtPk
ஆண்டி பைரன் விடுப்பில் இருக்கும் வரை இணை நிறுவனரும் தலைமை தயாரிப்பு அதிகாரியுமான பீட் டிஜாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் 'கிஸ் கேம்' தருணத்தின் போது அரங்கில் முத்தமிடும் அல்லது நெருக்கமாக இருக்கும் ஜோடிகள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டு அவர்கள் ஸ்கிரீனில் தெரிவார்கள்.
அப்படியான தருணத்தில் ஆண்டி பைரன், கிறிஸ்டின் கபோட்டை பின்னால் இருந்து கட்டியணைத்திருந்தபோது அவர்கள் முகம் ஸ்கிரீனில் தெரிந்துள்ளது. இதனால் இருவரும் அசௌகரியமடைந்து முகத்தை மறைக்க முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆண்டி பைரன், மேகன் கெர்ரிகன் என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டின் கபோட் ஏற்கெனவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.