Coolie: ``செளபின் சாஹிர் சரவெடி; உங்கள் காட்சிகள் இல்லாமல் மோனிகா இப்படி மாறியிருக்காது!'' - சாண்டி
'கூலி' திரைப்படத்தின் 'மோனிகா' பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஆமிர் கான், உபேந்திரா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

'மோனிகா' பாடல் குறித்து அப்பாடலின் நடன இயக்குநர் சாண்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சாண்டி, "மோனிகா பாடலை நீங்கள் அனைவரும் கொண்டாடுவதற்கு நன்றி. சௌபின் ஷாஹிர் சார் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த பாம்பர் ஹிட் பாடலில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
நாம் அனைவரும் சௌபின் ஷாஹிரின் அற்புதமான நடிப்பு பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்று அவரது நடனத் திறமைகளை அறிந்து கொள்வது சரவெடி! பூஜா ஹெக்டே மேடம், மோனிகாவை உருவாக்கியதற்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான ஸ்டைலான நடனக் கலைஞர். உங்களுடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம்.
அனிருத், ராக்ஸ்டார் என நீங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுடன் மீண்டும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. கடைசியாக, எப்போதும் என்னை நம்பும் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி.
கிரிஷ் கங்காதரன் அண்ணா, உங்கள் காட்சிகள் இல்லாமல் மோனிகா இவ்வளவு நட்சத்திர அனுபவமாக மாறியிருக்காது. நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை எனக்கு. நன்றிகள்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.