செய்திகள் :

Digital Arrest: 8 நாள் உணவு, தூக்கமின்றி தவித்த உதகை பெண்; ரூ.16 லட்சத்தைப் பறிகொடுத்தது எப்படி?‌

post image

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி‌ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்த படியே பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து இவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. சர்வதேச கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறிய அவர்கள், மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும், அதே பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை இருப்பதால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும் மும்பை சைபர் கிரைம் போலீஸிடம் இருந்து அழைப்பு வரும் என இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

Cyber Crime

சிறிது நேரத்திலேயே ஸ்கைப் மூலம் காணொளி வாயிலாகப் பெண்ணிடம் தொடர்புகொண்ட சிலர் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை முடியும் வரை இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே போனாலோ அல்லது வேறு யாரிடமும் தகவலைப் பகிர்ந்தால் சிக்கல் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். இதற்குப் பயந்து 8 நாட்களாக முறையான உணவு, தூக்கம் இல்லாமலும் இயற்கை உபாதைகளுக்குக் கூட முறையாகச் செல்ல முடியாமலும் தனி அறையில் தவித்து வந்திருக்கிறார். கடைசியாக அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் முழுவதையும் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.

விசாரணை முடிந்ததும் திருப்பிச் செலுத்தப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, 16 லட்சம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்‌ அந்த பெண். உடனடியாக ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டு அந்த பெண் முயன்றும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை மிகவும் தாமாக அறிந்து, நீலகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cyber Crime

நவீன மோசடி குறித்துத் தெரிவித்த சைப் கிரைம் போலீஸார், "டிஜிட்டல் கைது என்ற பெயரில் வீடியோ இணைப்பில் தோன்றி துன்புறுத்தி பணம் பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீலகிரியில் மட்டுமே இந்த ஆண்டு டிஜிட்டல் கைது என்று கூறி மிரட்டிய விவகாரம் தொடர்பாக 28 புகார்கள் பதிவாகியிருக்கிறது.‌ 68 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.‌ வட மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

UP: நடிகையின் மகன் மர்ம மரணம்; போராட்டம் செய்த கிராம மக்கள்... நடந்தது என்ன?

இந்தி டிவி தொடர்களில் நடித்து வருபவர் சப்னா சிங். இவரது 14 வயது மகன் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், மாமா வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தான். அம்மாணவனின் மாமா ஓம் பிரகாஷ் கடந்த 7-ம் தேதி அவன... மேலும் பார்க்க

`1 லி கெமிக்கலிலிருந்து 500 லி பால்' - 20 ஆண்டுகளாக ஏமாற்றிய தொழிலதிபர் கைது

பாலில் தண்ணீரைக் கலந்து விற்பது, பால் பவுடர் கலந்த நீரை சுத்தமான பால் என்று விற்பது போன்ற மோசடிகளுக்கு மத்தியில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொழிலதிபர் வெறும் கெமிக்கல் மூலம் செயற்கையாகப் பால் மற்றும் பா... மேலும் பார்க்க

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் பட்டம் விட்டு இளைஞருக்கு காயம் ஏற்படுத்திய விவகாரம்; 3 பேர் மீது வழக்கு!

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7-ம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கோவை ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம் அப்போது த... மேலும் பார்க்க

மீரட் கும்பல் கைவரிசை: நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து, பாலிவுட் நடிகரை கடத்தி பணம் பறிப்பு!

மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை மீரட்டிற்கு காமெடி ஷோ நடத்த வருமாறு அழைத்து, அவரை அடைத்து வைத்து ரூ.7 லட்சத்தை மர்ம கும்பல் பறித்தது. அச்சம்பவம் நடந்து சில நாட்களே ஆகியிருக்கும் ந... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் ரூ.2,000 கடன்; மிரட்டி துன்புறுத்திய கும்பல்; திருமணமான 47 நாளில் இளைஞர் தற்கொலை!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2,000 கடன் வாங்கிய 27 வயது இளைஞர், அந்தச் செயலியிலிருந்து வந்த துன்புறுத்தலால் திருமணமான 47 நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சிய... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கடத்தல்; குறைந்து வரும் பாதுகாப்பு நிதி - குழந்தைக் கடத்தலும் கொடூர பின்னணியும்!

''பொதுவாக, மக்களிடம் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் அல்லது மாயமாகினர் என்ற வார்த்தை தான் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அவர்கள் காணாமல் போகவில்லை, பெரும்பாலும் கடத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒரு குழந... மேலும் பார்க்க