செய்திகள் :

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்

post image

மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து, இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியிருக்கிறார்.

திலீப்பைத் தாண்டி, இப்படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் கூறியதாவது, “எனது முதல் படமான ப்ரின்ஸ் அண்ட் ஃபேமிலி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

பழைய கால மற்றும் நவீனகால மனநிலைகளுக்கு இடையிலான உண்மையான மோதலை இது ஒரு ஆழமான பார்வையுடன் எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கதையில் என்னை நம்பியதற்காக மேஜிக் ஃப்ரேம்ஸ், திலீப் சார் மற்றும் எங்கள் நடிகர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

நாங்கள் இப்படத்தை உருவாக்கியபோது ரசித்ததைப் போலவே, பார்வையாளர்களும் இப்படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

நடிகர் திலீப் கூறியதாவது, “ப்ரின்ஸ் அண்ட் ஃபேமிலி எனக்கு மிக முக்கியமான படம்.

இது எனது 150-வது படம் என்பதால் மட்டுமல்ல, இன்றைய உலகில் காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை என்பதாலும் இது முக்கியமானது.

இத்தனை துடிப்பான குழுவுடன் பணிபுரிந்ததும், ப்ரின்ஸ் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இப்படம் இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இதனால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க

Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை... மேலும் பார்க்க

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபம... மேலும் பார்க்க

Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘துடரும்' படத்தில்...ஓட... மேலும் பார்க்க

Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்

கடந்தாண்டு மலையாளப் படங்கள் பலவற்றை தமிழ் சினிமாவிலும் தூள் கிளப்பியிருந்தன. அந்த வரிசையில் 'ப்ரேமலு', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உட்பட பல மலையாள படைப்புகள் கடந்தாண்டு பல பக்கங்களிலும் கவனம் ஈர்த்திருந்தன. ச... மேலும் பார்க்க

Mohanlal: "பிரேம் நசீரைப் பற்றி அவர் தப்பா பேசினார்; அதனால அறைஞ்சுட்டேன்..." - மோகன்லால் ஓப்பன் டாக்

சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடைய கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து ‘துடரும்’ படத்தில் நடித்திருந்... மேலும் பார்க்க