செய்திகள் :

Diwali: எண்ணெய்க் குளியலும் அரப்புத்தூளும்..! | Nostalgia + Health

post image

25 அல்லது 30 வருடங்களுக்கு முன்னால் வரைக்கும், தலைச்சுமையாக அரப்புப்பொடியை சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்பனை செய்ய வருவார்கள் பெண்கள். தீபாவளியன்று நல்லெண்ணெயில் அரிசி, மிளகு, பூண்டு அல்லது சீரகம் போட்டு பொரிய விட்டு, அந்த எண்ணெயை தலைக்கு வைத்து அரப்புத்தூள் தேய்த்துக் குளிப்பார்கள்.

எப்போது ஷாம்பூ வீடுகளுக்குள் வர ஆரம்பித்ததோ, அப்போதே அரப்புத்தூள் நம் குளியலறையை விட்டு வெளியே போய்விட்டது. கிட்டத்தட்ட அரப்புத்தூள் என்கிற பொருளை அனைவரும் மறந்துவிட்ட நிலையில், சோஷியல் மீடியா புண்ணியத்தில் அரப்புத்தூள் பற்றிய தகவல்கள் ஆல்பா தலைமுறைக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது. அரப்புத்தூளை தலைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பன குறித்து இயற்கை மருத்துவர் யோ. தீபா இங்கே விளக்குகிறார்.

இயற்கை ஷாம்பூ உசிலை மரம்!

அதென்ன அரப்புத்தூள்?

''உசிலை மரத்தின் இலைகளை உருவி, வெயிலில் உலர்த்தி பொடி செய்தால் அரப்புத்தூள் ரெடி. உசிலையிலைத்தூள என்றுதானே சொல்ல வேண்டும்; ஏன் அரப்பு என்று சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். உசிலை இலையை அரைத்துப் பயன்படுத்துவதால், இதற்கு அரைப்பு என்று பெயர் வைத்தார்கள். அது காலப்போக்கில் 'அரப்பு' என்றாகி விட்டது. தூளாக இருப்பதால், 'அரப்புத்தூள்.' இதை சீயக்காய்த்தூளுடன் சேர்த்து தலைக்கு குளிக்க பயன்படுத்துவார்கள். அரப்புத்தூள் உடலின் சூட்டை தணிக்கும். பொடுகு வராமல் தடுக்கும். அரப்புத்தூளில் நன்கு நுரை வரும் என்பதால் அதை அப்படியே தலையில் தேய்த்துக்குளிக்கலாம். அல்லது சீயக்காய்த்தூளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

பளபளப்பாக இருக்க...

தலைமுடி பளபளப்பாக இருக்க வேண்டும் என்றாலோ அல்லது கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்றாலோ, பழைய சாதத்தில் இருக்கிற தண்ணீருடன் அல்லது சாதம் வடித்த கஞ்சித் தண்ணீருடன் அரப்புத்தூளை கலந்து பயன்படுத்த வேண்டும். 

அரப்புத்தூள்

கண்டிஷ்னிங் செய்ய...

இதுவே தலைமுடியை கண்டிஷ்னிங் செய்வதற்கு என்றால், அரப்புத்தூளை தண்ணீருடன் கலந்து தலைமுடியில் பேக் போல போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து முடியை அலச வேண்டும். இதனால் முடி கொட்டுவதும் நிற்கும்.

பொடுகை தடுக்க...

உடல் சூடு போலவே தலைமுடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் பொடுகு. அதை வராமல் அரப்புத்தூள் தடுக்கும். பொடுகில் வறட்சியினால் வருகிற பொடுகு, வியர்வை மற்றும் அழுக்கு ஆகியவற்றால் வருகிற பொடுகு என இரண்டு வகை இருக்கின்றன. இரண்டையுமே இந்த அரப்புத்தூள் வராமல் தடுக்கும். 

கூந்தல் பராமரிப்பு

கட்டிக்கட்டியாக பரு வருகிறதா?

இயற்கை மருத்துவத்தில் அரப்புத்தூளை முகத்தில் வருகிற சில சரும பிரச்னைகளுக்கு மருந்தாகவே பரிந்துரைப்போம். டீன் ஏஜில், சில பிள்ளைகளுக்கு முகப்பரு கட்டிக் கட்டியாக வரும். முகம் மட்டுமல்லாமல் முதுகு மற்றும் நெஞ்சு பகுதியில்கூட சிறு சிறு கட்டிகளாக வரும். அவர்களுக்கு இந்த அரப்புத்தூளை ஃபேஸ் பேக்காக தொடர்ந்து பயன்படுத்த சொல்வோம். கட்டிக் கட்டியாக இருக்கிற முகப்பருக்கள் அப்படியே அழுந்திப் போகும்.

முகம் எங்கும் கருப்புத் திட்டுகளா?

சிலருக்கு முகப்பரு வந்த தடம் முகமெங்கும் கருப்புத் திட்டுகளாக தெரியும். வெயிலில் சுற்றுபவர்களுக்கு சருமம் கருத்து போயிருக்கும். சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வந்திருக்கும். இவர்கள் எல்லாம் அரப்புத்தூளை தொடர்ந்து ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தி வந்தால், இறந்த செல்கள் உதிர்ந்து, முகப்பரு வந்த தடம் மறைந்து முகம் பளபளப்பாகும். உங்கள் சருமத்துக்கு கற்றாழை ஜெல் அலர்ஜி இல்லையென்றால், அரப்புத்தூளுடன் இந்த ஜெல்லை சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் சருமம் டாலடிக்கும். 

இயற்கை மருத்துவர் யோ. தீபா

தலையில் கெட்ட வாடையா?

சிலருக்கு தலையில் லேசான கெட்ட வாடை வரும். இவர்கள் அரப்புத்தூளுடன் கற்றாழை ஜெல், செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால், தலை சருமத்தில் இருக்கிற இறந்த செல்கள் வெளியேறி முடி நன்கு வளரும். அந்த வாடையும் போகும். தீபாவளி எண்ணெய்க்குளியலுக்கு அரப்புத்தூள் நல்ல காம்பினேஷனாக இருக்கும். நாட்டு மருந்துகளில் அரப்புத்தூள் கிடைக்கும். இந்த வருடம் டிரை செய்து பாருங்கள்'' என்கிறார் டாக்டர் யோ. தீபா.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன?

முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவின் மிக்சிகன் ( Mich... மேலும் பார்க்க

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க