செய்திகள் :

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும்.

இரவு உணவை முடித்துவிட்டு,  தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம்.

அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும்.   காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல்  உடனே உறிஞ்சிக் கொள்ளும்.  அது கொழுப்பாக மாறுவதற்கு  வாய்ப்புள்ளது.

இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்
இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்

எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள்.  அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும்  ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம்.

மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

முடவாட்டுக்கால் உண்மையிலே முட்டிவலியைப் போக்குமா?

முட்டிவலி என்று கூகுளில் டைப் செய்தால், முடவாட்டுக்கால் பற்றிய கட்டுரைகளும் வீடியோக்களும் கொட்டுகின்றன. 'முடவாட்டுக்கால் சூப் செய்வது எப்படி' என்கிற சமையல் வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. முடவாட்டுக்கால... மேலும் பார்க்க

Doctor Vikatan: சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பான உணவுகளை அறவே தவிர்க்கவேண்டுமா?

Doctor Vikatan: என்உறவினருக்கு நீண்டகாலமாக சைனஸ் பிரச்னை உள்ளது. குளிர்காலத்தில் அது இன்னும் தீவிரமாகும். அவர் உணவில் புளிப்புச்சுவையைஅறவே சேர்த்துக்கொள்வதில்லை. புளி உள்ளிட்ட அனைத்து புளிப்பு உணவுகளு... மேலும் பார்க்க

Digestion: ஜீரணப் பிரச்னை; வராமல் தடுக்க மருத்துவர் கு.சிவராமன் கம்ப்ளீட் வழிகாட்டல்!

''சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளைஎடுத்துக்கொள்ளச்சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளைதினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று... மேலும் பார்க்க

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என்வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போதுப்ளீடிங்அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், ... மேலும் பார்க்க

சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு... மேலும் பார்க்க