செய்திகள் :

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

post image

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம்.

நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை. 

இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப்  புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம்.

இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம்.

நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும்.

அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும்.

வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என்வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போதுப்ளீடிங்அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், ... மேலும் பார்க்க

சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?

Doctor Vikatan:என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அத... மேலும் பார்க்க

Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?

செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?

Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா?பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்ச... மேலும் பார்க்க

Dopamine toxicity: செயற்கையான மகிழ்ச்சியோட இருந்தீங்கன்னா என்னப் பிரச்னை வரும் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் ... மேலும் பார்க்க