செய்திகள் :

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

post image

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள் சொல்வதைக் கேட்கிறோம்.

தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் கொடுப்பதில் என்னதான் சிக்கல்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பசும்பாலுக்கும் தாய்ப்பாலுக்கும் அவற்றின் தரம், ஊட்டச்சத்துகள் போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதைத் தவிர்க்கச் சொல்கிறோம்.

100 மில்லி பசும்பாலில் புரதச்சத்து 3.5 கிராம் இருக்கும். தாய்ப்பாலில் அது 1.1 கிராம் இருக்கும். பசும்பாலில் உள்ள அதிகப்படியான புரதம், சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். அது குழந்தையின் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல. 

மெட்டபாலிக் ஸ்ட்ரெஸ் எனப்படும் வளர்சிதைமாற்ற அழுத்தமும் அதிகரிக்கும். பசும்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான டிஹெச்ஏ (DHA) மற்றும் அராகிடோனிக் அமிலம் (Arachidonic Acid) இல்லை.

தாய்ப்பாலில் இம்யூனோகுளோபிலின் (Immunoglobulin) , லாக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) போன்றவை உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும் இவை எதுவும் பசும்பாலில் கிடையாது. கேசின் (Casein)- லாக்டோஆல்புமின் (Lactalbumin) விகிதம் என ஒன்று உண்டு. தாய்ப்பாலில் இது 40:60 என்ற விகிதத்தில் இருக்கும். அதுவே பசும்பாலில் 80:20 என்ற விகிதத்தில் இருக்கும்.

அதனால் பசும்பாலை செரிமானம் செய்வதும் குழந்தைகளுக்குக் கடினமாக இருக்கும். அதனால்தான் தாய்ப்பால் இல்லாத நிலையில், பசும்பாலைப் பரிந்துரைக்காமல், ஃபார்முலா மில்க் எனப்படும் பவுடர் பாலை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையாக இருப்பதுதான் காரணம்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பிறகு கஞ்சி போன்ற உணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது, அதில் மிகச் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பிறகு கஞ்சி போன்ற உணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது, அதில் மிகச் சிறிதளவு பால் சேர்க்கலாம். அதுவும் மருத்துவரின் அனுமதிபெற்றே சேர்க்கப்பட வேண்டும்.

பாலாக கொடுப்பதைவிடவும் தயிராகக் கொடுப்பது இன்னும் சிறந்தது. தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் மிகச்சிறந்த பரிந்துரை என்பதை நினைவில் கொள்ளவும். 

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்ய, தகுந்த  'இன்ஃபான்ட் ஃபார்முலா' (Infant Formula) உணவை உங்கள் குழந்தைநல மருத்துவரிடம் ஆலோசித்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கான உணவுமுறை சார்ந்த முடிவுகள், தகுதிவாய்ந்த  மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மறக்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: சீயக்காயா... ஷாம்பூவா... தலைக்குக் குளிக்க ஏற்றது எது?

Doctor Vikatan: தலைக்குக் குளிக்க சீயக்காய்த் தூள்தான் சிறந்தது, காலங்காலமாக அதைத்தான் உபயோகித்து வந்தோம் என ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். சீயக்காய் எல்லாம் வேஸ்ட்... ஷாம்பூதான் பெஸ்ட் என்று சொல்கிறார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்பிரின் அலர்ஜி உள்ள இதய நோயாளிகளுக்கு மாற்று மருந்து உண்டா?

Doctor Vikatan: ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் குளோபிடோக்ரல் (Clopidogrel) மாத்திரைகள் இரண்டிற்கும் ஒவ்வாமை (Allergy) உள்ள நோயாளிகளுக்கு மாற்று மருந்துகள் என்ன?-m.mohamed Rafic, விகடன் இணையத்திலிருந்து ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் கடுமையான தலைவலிக்கு உள்ளாகிறேன். வெயில் இல்லாத நேரங்களில் இப்படி ஆவதில்லை. வெயிலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு... இந்த வகை தலைவலியை... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை.... வீடுகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு... ஏன் இப்படி?

Doctor Vikatan:வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகம... மேலும் பார்க்க

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இ... மேலும் பார்க்க