செய்திகள் :

Doctor Vikatan: வெயிட்லாஸால் தொய்வடைந்த முகம்... பழையநிலைக்குத் திரும்ப முடியுமா?

post image

Doctor Vikatan: என் வயது 39.  சராசரியைவிட 15 கிலோ எடை அதிகமாக இருந்தேன். அதைக் குறைக்க நினைத்து கடந்த 8 மாதங்களாக கடுமையான டயட்டை ஃபாலோ செய்தேன். அதில் உடல் எடை குறைந்தது. ஆனால், முகம் தொய்வடைந்துவிட்டது.  அதனால் நோயாளி போன்றும் வயதானவர் போன்றும் காட்சியளிக்கிறேன்.  வெயிட்லாஸுக்கு பிறகு தளர்வடைந்த என் முகத்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வைக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

எடை குறையும்போது முதலில் அது முகத்தில்தான் தெரியும். கன்னங்கள் ஒட்டிப்போகும். முகம் மெலிந்து, தொய்வடைந்த மாதிரி காட்சியளிக்கும். மருத்துவர் அல்லது டயட்டீஷியன் ஆலோசனையின் பேரில் டயட்டை பின்பற்றுவோருக்கு இந்தப் பிரச்னை இருக்காது. தாமாகவே ஏதோ ஒரு டயட்டை பின்பற்றும்போதுதான் முகம் தொய்வடையும், சருமம் தளர்ந்து, லூசாகும்.

சிலர் உணவின் அளவை பெரிய அளவில் குறைத்து எடையைக் குறைக்க முயல்வார்கள். இன்னும் சிலர் கார்போஹைட்ரேட்டே வேண்டாம் என அதை முற்றிலும் தவிர்ப்பார்கள். தவறான உணவுப்பழக்கம் தவிர, வேறு சில பழக்கங்களாலும் சராசரியைவிட முன்னதாகவே முதுமைத்தோற்றம் வந்துவிடும். உதாரணத்துக்கு, பெரிய தலையணை வைத்துப் படுப்பது. ஒருக்களித்துப் படுக்கும்போது, கன்னத்தை, தலையணையில் அழுத்திப் படுப்பது போன்றவை.

தொய்வடைந்த முகம்

தினமும் காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், கிரேப்சீட் எண்ணெய் போன்ற ஏதேனும் ஓர் ஆயிலில் சிறிது எடுத்து முகத்தை மசாஜ் செய்யப் பழகுங்கள். முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை தவிர்க்கப்படும். இந்த மசாஜுக்கு பிறகு நீங்கள் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக்கூடிய பேக் ஒன்றையும் உபயோகிக்கலாம்.

பார்ஸ்லி இலை

அந்த பேக் செய்ய பார்ஸ்லி இலைகள் அடிப்படை. பார்ப்பதற்கு கொத்தமல்லி இலைகளைப் போலக் காட்சியளிக்கும் இதற்கு சருமத்தின் நீர்த்துவத்தைத் தக்கவைக்கும் தன்மை உண்டு. கைப்பிடி அளவு பார்ஸ்லி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு 30 நொடிகள் வைத்திருந்து, அடுப்பை அணைத்து மூடி வையுங்கள். பிறகு அந்தக் கீரையை எடுத்து மிக்சியில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அந்தச் சாற்றில் 3 டீஸ்பூன்  கார்ன் ஃப்ளார்,  அதே அளவு கயோலின் பவுடர்,  30 மில்லி ஜோஜோபா ஆயில் எல்லாவற்றையும்  நன்கு கலந்து கொள்ளவும். 

தலையை உயர்த்திவைத்துப் படுத்துக்கொள்ளுங்கள். கைகளை உபயோகித்து இந்த பேக்கை கழுத்திலிருந்து முகத்தில் மேல்நோக்கித் தடவுங்கள். அது காயும்வரை பேசக்கூடாது.  பிறகு கைகளை தண்ணீரில் நனைத்து வட்டவடிவமாகத் துடைத்து எடுத்துவிட்டு, வெறும் தண்ணீரில் கழுவி விடலாம். 3 நாள்களுக்கொரு முறை இதைப் பின்பற்றினாலே நல்ல மாற்றத்தைப் பார்ப்பீர்கள். தளர்ந்த சருமம் டைட் ஆகும். இத்துடன் உங்கள் உணவுப்பழக்கத்தையும் சரி பாருங்கள். முறையான ஆலோசனையோடு டயட்டை பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Priyanka: கேரள பாரம்பர்ய கசவு சேலையில் முழங்கிய பிரியங்கா... அதிர்ந்த நாடாளுமன்றம்..

இந்திய நாட்டின் மிக நீண்ட அரசியல் பாரம்பர்யம் கொண்ட ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, முதல் முறையாக தேர்தல் அரசியலில் வேட்பாளராக களம் இறக்கியது காங்கிரஸ் தலைமை. தந்தையின் படுகொலைக... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம்: `சிறந்த கட்டுமானம்' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தென்னக ரயில்வே

`பாதுகாப்பு குறைபாடு' - செளத்திரி அறிக்கை...ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்க கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல் காற்றின் அரிமானத்தால் வழு இழந்தது. இதையடுத... மேலும் பார்க்க

Adani: `அதானி நிறுவனத்திடம் லஞ்சம்?' - அமெரிக்க குற்றச்சாட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்!

அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சோலார் மின்சார ஒப்பந்தங்களைப் பெருவதற்கு இந்தியாவின் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப... மேலும் பார்க்க

``மூழ்கி கிடக்கும் பயிர்கள்; ஸ்டாலின் இதுவரை விவசாயிகளை எட்டிக் கூட பார்க்கவில்லை'' -சாடிய சசிகலா

மன்னார்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சசிகலா, தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது, "நான்கு ஆண்டு கால ஆட்சிய... மேலும் பார்க்க

``ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு கடிதம் கொடுத்தேன்..." - வைகோ பகிர்வு!

சென்னை எழும்பூரில் மாவீரர் நாள் நிகழ்ச்சி மதிமுக சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ``விடுதலைப் புலிகள் என் கிராமத்தில், என் வீட்டில் ஒருவருடம் தங்கினார்கள்.... மேலும் பார்க்க

சுகாதார சீர்கேடு, கட்டிட இடிபாடு; அச்சத்துடன் படிக்கும் மாணவர்கள்... ஓமந்தூர் அரசு பள்ளியின் நிலை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசுப் பள்ளி இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. தமிழகத்தின் முன்னாள் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராம... மேலும் பார்க்க