செய்திகள் :

Doctor Vikatan: காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள். அது உடலுக்கு மிக நல்லது என்கிறாள். நெய் என்றாலே கொழுப்பு என்று கேள்விப்பட்ட எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது.  தினமும் காலையில் நெய் எடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா.

ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா

தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நெய் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நெய்யில் நிறைய நல்ல தன்மைகள் உள்ளன. தினமும் காலையில் வெறும்வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது செரிமானத்துக்கு உதவும். செரிமானத்துக்கான அமிலங்கள் வயிற்றில் சுரந்து, அன்றைய நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் ஊட்டச்சத்துகள் உட்கிரகிக்கப்படவும், உணவு நன்கு செரிமானமாகவும் நெய் உதவும். நெய்யில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு அமிலம் இருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கும். அந்த எனர்ஜியானது அந்த நாள் முழுவதும் தொடரும். 

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் நெய் உதவும். 'என்னது.... நெய் எடுத்துக்கிட்டா எடை குறையுமா...' என நீங்கள் ஆச்சர்யப்படலாம். உண்மைதான்.ஆரோக்கியமான எந்த உணவையும் அளவோடு எடுத்துக்கொள்ளும்போது ஏராளமான நன்மைகள் உள்ளன. அது நெய்க்கும் பொருந்தும்.  நெய்யில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு, நம் ஹார்மோன்களின் சமநிலைக்கு உதவும். தினமும் அளவோடு நெய் எடுத்துக்கொள்ளும்போது அனாவசிய உணவுத் தேடல் குறையும். அதன் மூலம் எடைக்குறைப்பு சாத்தியமாகும்.

இன்றைய சூழலில் பலருக்கும் மலச்ச்சிக்கல் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம். தினமும் காலையில் எடுத்துக்கொள்ளும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய், மலத்தை இளக்கி, குடல் அசைவுகளைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுதலை தரும். 

சரும ஆரோக்கியம்

சருமத்தின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்கூட நெய் மிகவும் நல்லது. நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் சரும நிறமும் பளபளப்பும் கூடும். முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும்.  உடலை நச்சுநீக்கம் செய்வதற்கென டீடாக்ஸ் ஜூஸ் போன்றவற்றை பலர் எடுத்துக்கொள்கிறார்கள்.  அவற்றுக்கு பதிலாக நெய் எடுத்துக்கொண்டால், அது உடலை இயற்கையாக டீடாக்ஸ் செய்யும். உடலின் தேவையற்ற நச்சுகள், கழிவுகள் வெளியேறும். உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும் நெய் உதவும்.  நெய்யில்  இத்தனை நல்ல தன்மைகள் உள்ளதால் தினமும் அளவோடு அதைச் சேர்த்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தால் இதய நோய் வரலாம்'' - ஆய்வில் தகவல்!

நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தாலும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.மருத்துவர் எஸிம் அஜுபோ (Ezim Ajufo) பாஸ்டனைச் சேர்ந்த இதவியல் நிபு... மேலும் பார்க்க

அஜித்பவார் - சரத்பவார் மோதிய தொகுதிகளில் 70% வாக்குப்பதிவு... சர்க்கரை சாம்ராஜ்யம் யாருக்கு?

எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி... தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..!

முதல்வர் பதவிக்கு இப்போதே கடும் போட்டி...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலையில் எண்ணப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இரண்டு அணியிலும் முதல்வர் பதவிக்கு இப்போத... மேலும் பார்க்க

``பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!'' - மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!

"ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்" என்றுகொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர்.தமி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 56 வயது. அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயாளியாகஇருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செ... மேலும் பார்க்க

``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தப் பகுதியின் மத்திய கள‌ ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தமிழ... மேலும் பார்க்க