செய்திகள் :

Donald Trump: ``BRICS நாடுகளின் இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி..'' - ட்ரம்ப் மிரட்டுவது ஏன்?

post image

வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

இந்த குழு ஏதேனும் திட்டத்துடன் மீண்டும் உருவானால் உடனடியாக கலைக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.

அமெரிக்க எதிர்ப்பு கொள்கை!

"நான் இந்த பிரிக்ஸ் பற்றி கேட்கும்போது, அடிப்படையில் ஆறு நாடுகள், அவர்களை மிகவும் கடுமையாக தாக்கினேன். அவர்க உண்மையில் அர்த்தமுள்ள வகையில் உருவானால், அது விரைவில் முடிவடையும்" என நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் எச்சரித்தார் ட்ரம்ப். "நம்முடன் யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது" என்றார்.

brics brazil 2025
brics brazil 2025

மேலும் ட்ரம்ப், அமெரிக்க டாலர்கள் உலகின் இருப்பு நாணயமாக செயல்படுவதைக் காப்பார் என்றும், அமெரிக்க மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க-எதிர்ப்பு கொள்கைகளுடன் இணையும் எந்தவொரு நாட்டுக்கும் ஜூலை 6-ம் தேதி அறிவித்த புதிய வரி பொருந்தும் என அறிவித்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப் - பிரிக்ஸ் மோதல்!

உலகளாவிய முக்கிய பொருளாதார மன்றங்களாக இருக்கும் ஜி7, ஜி20 போன்றவை நாடுகளுக்கு இடையிலான முரண்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் அமெரிக்க அதிபரின் 'அமெரிக்கா முதலில்' கொள்கையால் சீர்குலைந்து வருகிறது. இந்த நிலையில், பலதரப்பு ராஜாந்திர நடவடிக்கைகளை விரும்பும் நாடுகளுக்கான புகலிடமாக தன்னைக் காட்டிக்கொள்கிறது பிரிக்ஸ் அமைப்பு.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் பிரிக்ஸ் அமைப்பு உலகின் இருப்பு நாணயமாக டாலரின் இடத்தை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

ஆனால் பிரிக்ஸ், தாங்கள் அமெரிக்கா எதிர்ப்பாளர்கள் இல்லை எனக் கூறிவருகிறது.

பிரிக்ஸ் நாடுகள் இடையே ஒரு பொதுவான கரன்சியை பயன்படுத்தும் முயற்சிகளைக் கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் கைவிட்டது. அதைத்தொடர்ந்து உள்ளூர் நாணயங்களில் நிதிப்பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், வர்த்தகங்களுக்கு உதவும் வகையிலும் 'பிரிக்ஸ் பே' என்ற எல்லை தாண்டிய கட்டண முறையை உருவாக்க அந்த அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

BRICS பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கடந்து தன்னை விரிவுபடுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஈரான் மற்றும் இந்தோனேசியா நாடுகள் இதில் இணைந்தன.

BRICS Brazil 2025
BRICS Brazil 2025

பிரேசிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் இராணுவ மற்றும் வர்த்தக கொள்கைகளை மறைமுகமாக விமர்சித்தனர்.

பிரிக்ஸ் நாடுகளில் பிரேசிலை மட்டும் குறிவைத்து ட்ரம்ப் 50% வரி விதித்துள்ளார். இது ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும். மேலும் அமெரிக்கா நியாயமற்றதாகக் கருதும் பிரேசிலின் வர்த்தக கொள்கைகள் மீது விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.கோவை ப... மேலும் பார்க்க

``என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்'' - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த ... மேலும் பார்க்க

OPS: தடுமாறி நிற்கும் ஓபிஎஸ்? விஜய் பக்கமாக சாய்கிறாரா? - அடுத்தக்கட்ட மூவ் என்ன? | In Depth

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்... மேலும் பார்க்க

M.K.Muthu: கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.மு.க.முத்து - ஸ்டாலின் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ள... மேலும் பார்க்க

Healthy Food: எல்லோருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு.. பிளஸ், மைனஸ் தெரிஞ்சிக்கோங்க!

''ஏதாவது ஒரு சாதத்தைக் கலந்து, அதோடு உருளைக்கிழங்கு வெச்சுட்டோம்னா போதும்... என் பசங்க மிச்சம் வைக்காமச் சாப்பிட்ருவாங்க’’ - பல அம்மாக்கள் சொல்கிற டயலாக் இது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மிகவு... மேலும் பார்க்க