சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தி...
Elon Musk house: 400 சதுர அடி வீடுதான்; தாய் தங்குவதற்குகூட இடமில்லை; வியக்கவைக்கும் மஸ்க்கின் எளிமை
உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால், கோல்டன் கேட்கள், டஜன் கணக்கான படுக்கையறைகள் மற்றும் பிரமாண்ட நீச்சல் குளங்கள் கொண்ட அரண்மனையில்தான் வாழ்வர் என்று நாம் நினைப்போம். ஆனால், எலான் மஸ்க் அனைத்தையும் தலைகீழாக மாற்றியவர். 2020-ஆம் ஆண்டில், "சொந்தமாக இனி வீடு வைத்திருக்கப் போவதில்லை" என்ற அதிரடி முடிவை எடுத்த அவர், தனது பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களை விற்றுவிட்டு, டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தளத்திற்கு அருகில் ஒரு சிறிய வீட்டிற்கு குடியேறினார்.
இதன் மதிப்பு வெறும் 50,000 டாலர்கள் (சுமார் ₹42 லட்சம்) மட்டுமே. ஒரு நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் காரின் விலையை விட இது குறைவு என்பதுதான் உலகையே வியக்க வைத்த விஷயம்.
வெறும் 400 சதுர அடி மட்டுமே கொண்ட இந்த வீட்டிற்குள் என்னதான் இருக்கிறது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. சமீபத்தில் எலான் மஸ்க்கின் தாய் மேயே மஸ்க் (Maye Musk) பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு ஹால், ஒரு சிறிய சமையலறை மற்றும் ஒரே ஒரு படுக்கையறை என மிகச் சுருக்கமான இடத்தில்தான் மஸ்க் வசிக்கிறார். விண்வெளிப் பயணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பற்றிச் சிந்திக்கும் உலகின் மிகப்பெரிய மூளை, இவ்வளவு சிறிய இடத்திற்குள் அடங்கியிருப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. அங்கு ஆடம்பரமான சோபாக்களோ, அலங்காரப் பொருட்களோ கிடையாது; ஒரு எளிய மர மேசையில் அமர்ந்துதான் அவர் தனது உலகளாவிய நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.
மேயே மஸ்க் தனது மகனைப் பார்க்கச் செல்லும்போது தங்குவதற்குகூட அந்த வீட்டில் இடமிருக்காதாம்! "உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், என் மகனிடம் விருந்தினர்களுக்காக ஒரு தனி அறைகூட இல்லை. நான் அவரைப் பார்க்கச் செல்லும்போது, ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகிலுள்ள ஒரு கேரேஜில்தான் தூங்க வேண்டியிருக்கிறது.
ராக்கெட் தளத்தில் நீங்கள் ஆடம்பரமான தங்குமிடங்களை எதிர்பார்க்க முடியாது" என்று அவர் நகைச்சுவையாகவும் வியப்பாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தாயாக, தன் மகன் இவ்வளவு உயரத்தில் இருந்தும் அடிப்படை வசதிகளுடன் ஒரு கேரேஜில் தன்னைத் தங்க வைப்பதைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசினார்.
There is no food in the fridge. The garage where I slept is on the right. The shower only has one towel so I left it for Elon. That was okay with me. When I was a child, I’d spend three weeks in the Kalahari Desert without showering. Many times. There was no water. I think my… https://t.co/8XT04q5DQg
— Maye Musk (@mayemusk) March 10, 2026
மஸ்க் ஏன் இப்படி வாழ்கிறார் என்பதற்குப் பின்னால் ஒரு பெரிய லட்சியமே ஒளிந்திருக்கிறது. "அதிகமான உடைமைகள் மனிதனை ஒரு இடத்திலேயே கட்டிப்போட்டுவிடும்" என்பது மஸ்க்கின் கருத்து. செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது மிகப்பெரிய கனவிற்காக, பூமியில் உள்ள சொகுசுகளை அவர் தியாகம் செய்துள்ளார்.
தனது நேரத்தையும் கவனத்தையும் ஆடம்பரப் பொருட்களில் சிதறவிடாமல், முழுமையாகத் தனது நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிடவே இந்த வாழ்க்கை முறையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தும், ஒரு சிறிய பெட்டி போன்ற வீட்டில் வசித்துக்கொண்டு விண்வெளியையே ஆள நினைக்கும் மஸ்க்கின் இந்தத் துணிச்சலான முடிவு உண்மையில் ஆச்சர்யமானது!





















