Rahul Gandhi: ``துரோணர் ஏகலைவரின் கட்டை விரலை வெட்டியதுப்போல...'' - பாஜகவை சாடிய...
EVKS Elangovan: தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல்; நாளை இறுதி சடங்கு!
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார்.
ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சையளிக்க சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்திருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டிருகிறது. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு போன்ற அரசியல் தலைவர்கள் மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாளை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்ய மூர்த்திபவனில் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு, இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.