செய்திகள் :

EVKS: பெரியாரின் பேரன் டு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் - இளங்கோவனின் அரசியல் பயணம் ஒரு பார்வை!

post image
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது அரசியல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிவந்த அரசியல் தலைவர்களுள் இளங்கோவன் குறிப்பிடத்தக்கவர். தன் தடாலடி கருத்துகளாலும், விமர்சனங்களாலும் பலருக்கும் பரிச்சயமானவர். தமிழச் சமூகத்தின் தவிர்க்கஇயலாத தலைவரான பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. அவருடைய மகன் ஈ.வெ.கி.சம்பத். இவர் தமிழ் தேசியக் கட்சி, தி.மு.க, காங்கிரஸ் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தமிழக அரசியலின் முக்கிய காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிற திமுக கட்சி தொடங்கியதில் இவருக்கும் பெரும் பங்குண்டு. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்து தனியாக திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது அண்ணாவுடன் உடன் நின்றவர். திமுக வளர்த்தெடுத்ததில் சம்பத்துக்கும் பங்குண்டு. அதன் பிறகு திமுகவிலிருந்தும் வெளியேறி கவிஞர் கண்ணதாசன், பழ நெடுமாறன் இருவருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அந்த சம்பத்துடைய மகன்தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

`பெரியாரின் பேரன்' என இவரை அரசியல் களம் வாஞ்சையோடு அழைத்தது. சம்பத் தன் தமிழ் தேசியக் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். தன் தந்தை ஈ.வி.கே.சம்பத் பயணித்த அதே காங்கிரஸ் கட்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

EVKS

1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு நடைப்பெற்ற தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வேட்பாளராக சத்தியமங்கலத்தில் முதல் முறையாக தேர்தலை எதிர்க்கொண்டு, வெற்றிப் பெற்றார். அதைத் தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 1996-2001 வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பேற்ற 1996 காலகட்டம் அக்கட்சி, தமாகா(தமிழ் மாநில காங்கிரசு) பிளவால் மிக பலவீனமாக இருந்த காலம்.

அப்போது ஒற்றை ஆளாக தன் துணிச்சலான பேச்சு ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கட்சியை நடத்திக் காட்டினார். குறிப்பாக அதிமுக தலைவர் ஜெயலலிதாவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். அவர் விமர்சனத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியும் தப்பியது இல்லை. தவிர 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் நுழைந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், ஜவுளித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் (சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் (கோபிசெட்டிபாளையம் தொகுதி) வெற்றிபெற்றிருக்கிறார்.

EVKS ELANGOVAN

அதற்குப் பிறகு அவர் போட்டியிட்டத் தேர்தல்களில் தொடர் தோல்வியால் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில், அவரின் மகன் திருமகன் ஈவெரா-வை வெற்றிப்பெறச் செய்து தேர்தல் அரசியலிருந்து விலகியிருந்தார். ஆனால், 2023-ம் ஆண்டு திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது நடந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை வகித்த இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பே.

நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா தொடர்பாக மகா., முதல்வர் பட்னாவிஸை இரவில் சந்தித்து பேசிய ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. புதிய முதல்வர் கடந்த 5-ம் தேதி பதவியேற்று 10 நாள்கள் ஆகிவிட்ட ந... மேலும் பார்க்க

`அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனம் படைத்தவர்' - EVKS-க்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்... மேலும் பார்க்க

EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: `ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி' - கேரள அரசிடம் ரூ.132 கோடி கேட்கும் மத்திய அரசு!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மல, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீ... மேலும் பார்க்க