மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
Free Train Travel: 1948 முதல் இந்தியாவில் இயங்கும் ஒரே இலவச ரயில்: எங்கே தெரியுமா?
இந்தியாவில் இயங்கும் ஒரே இலவச ரயில் பற்றிய செய்தி தெரியுமா உங்களுக்கு... சுமார் 27 கிராம மக்கள் பயன்பெறும் இந்த ரயிலில் தினசரி 800 பயணிகள் பயணிக்கிறார்கள். இந்த ரயிலின் கதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் இருக்கிறது சட்லஜ் நதி. இந்த நதியின் குறுக்கே அணை கட்டவேண்டும் என 1948-ம் ஆண்டு அரசு திட்டமிட்டது. அதற்குத் தேவையான சிமெண்ட், கல் போன்ற கட்டுமானப் பொருள்களை பஞ்சாபின் நங்கல் பகுதியிலிருந்து அணை கட்டப்படும் பகரா பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
போதுமான சாலை வசதியோ அல்லது வேறு திட்டங்களோ அப்போது இல்லை. எனவே, பஞ்சாப் மாநிலத்தின் நங்கள் பகுதிக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா பகுதிக்கும் இடையே 13 கி.மீ தூரத்துக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அணைக் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டன. தினமும், கட்டுமானப் பொருள்களும், கட்டுமானப் பணிக்கான ஆட்களும் அந்த ரயிலிலேயே வந்து, வேலைகளை முடித்து மாலை திரும்பும் போது, அந்த ரயிலிலேயே கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் கட்டுமானப் பணிகள் 1963-ம் ஆண்டு முடிந்தது.
ஆனால், இன்றும், பஞ்சாபின் நங்கல் - இமாச்சலப் பிரதேசத்தின் பக்ராவுக்குமிடையே ரயில் சேவை தொடர்கிறது. இந்த ரயிலில் தினமும் சுமார் 800 நபர்கள் பயணிப்பதாகவும், சுமார் 27 கிராமங்கள் பயனடைவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பம் முதல் இப்போதுவரை மரப் பெட்டிகளுடன் ஓடும் இந்த ரயிலில், டீசல் இன்ஜின் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.