செய்திகள் :

GV Prakash: "அவருடைய குடும்பப் பிரச்னையில் எவ்வளவு நாகரீகமாக நடந்தார் என்பதை.." - வசந்த பாலன்

post image

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிளாக்மெயில்’.

தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று ( ஜூலை 19) நடைபெற்று வருகிறது. 

‘பிளாக்மெயில்’ படம்
‘பிளாக்மெயில்’ படம்

இந்நிகழ்வில் பேசிய வசந்த பாலன், “என்னிடம்  ஜி.வி.பிரகாஷ் வரும்போது சின்ன பையனாகத்தான் இருந்தார். 17 வயதில் பார்த்த ஜி.வியின் வளர்ச்சியை இப்போது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ஜிவி-யுடன் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று பெருமையாக நினைப்பேன்.

நான் ஜிவி-யை வைத்து படம் எடுக்கவில்லை என்றாலும் வேறு யார் மூலமாவது ஜிவி இந்த இடத்தைப் பிடித்திருப்பார்.

யாரையும் வெறுக்காத, யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரிடமும் மோசமாக நடந்துக்கொள்ளாத ஒரு குணத்தை ஜி.வி-யிடம் நான் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் அவருடைய குடும்பப் பிரச்னையில் எவ்வளவு நாகரீகமாக நடந்துகொண்டார் என்பதை ஒரு வீடியோவில் பார்த்தேன்.

பிறகு அவரைத் தொடர்புகொண்டு ஆச்சரியமாக இருக்கிறது ஜி.வி இந்த வயதில் இவ்வளவு நாகரீகமாக நடந்துகொள்கிறாய் என்று சொன்னேன்.

ஜி.வி பிரகாஷ்
ஜி.வி பிரகாஷ்

இந்த மாதிரியான ஒரு நபர் இன்டஸ்ட்ரியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேரன்பிற்காக அவர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பெரிய இடத்தைத் தொட வேண்டும்.

ஜி.விக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் நிச்சயம் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ஜி.வி-யைப் பாராட்டி பேசியிருந்தார்.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

MK Muthu: "அவருடைய படத்தை முதல் நாள் பார்த்த ஞாபகம் இருக்கு..." - நினைவுகளைப் பகிரும் சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வ... மேலும் பார்க்க

Trending Review: டெக்னோ த்ரில்லர் கதைக்களம், நிறைவான நடிப்பு; ஆனாலும் சிக்கல்கள் வரிசை கட்டுவது ஏன்?

சென்னையைச் சேர்ந்த அர்ஜுனும் (கலையரசன்), மீராவும் (ப்ரியாலயா) யூட்யூப் டிரெண்டிங் தம்பதியாக வலம் வருகிறார்கள். லைக்ஸ், ரீல்ஸ், ஸ்டோரி எனச் சமூக வலைத்தளங்களும் அவற்றைச் சார்ந்த வாழ்வுமாக தங்களின் ஒவ்வொ... மேலும் பார்க்க

Blackmail: ``இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்'' - இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ்

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிளாக்மெயில்’. தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் விமர்சனம்: 2கே கிட்ஸ் லவ் ஸ்டோரியில் இத்தனை பழைமைவாதங்களும் செயற்கைத்தனங்களுமா?!

சந்துருவின் (ராஜு ஜெயமோகன்) தாயார் லலிதா (சரண்யா பொன்வண்ணன்), மதுமிதாவின் (ஆதியா) தாயார் உமா (தேவதர்ஷினி) ஆகிய இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அ... மேலும் பார்க்க

MK Muthu: கருணாநிதியின் கலையுலக வாரிசு; நடிகர் முதல் பாடகர் வரை மு.க.முத்து வாழ்க்கை..

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று(ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 77.கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் த... மேலும் பார்க்க

3 BHK: `என்னுடைய காட்சிகளைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதாங்க!' -அறிமுக நடிகர் சதீஷ்குமார் ஷேரிங்ஸ்!

ஃபைனலி யூடியூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான சதீஷ்குமார் '3 BHK' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தனது நடிப்பு பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து சதீஷ்கு... மேலும் பார்க்க