முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
GV Prakash: "படத்தின் ரிலீஸுக்கு உதவி, ஜி.வி பாதி சம்பளம்தான் வாங்கினார்" - தயாரிப்பாளர் சொல்வதென்ன?
'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் 'ப்ளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
படத்தில், ஶ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி. பாதி சம்பளம் மட்டுமே பெற்றுக் கொண்டு படத்திற்கு உதவியிருக்கிறார் என அப்படத்தின் தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ளாக்மெயில் படத்தின் தயாரிப்பாளர் அமல் ராஜ் பேசுகையில், "எங்கப் படத்தோட ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நான் நன்றி சொல்லியாகணும். இன்றைய தேதியில், நடிகர்கள் பலரும் முழு சம்பளத்தை வாங்கிட்டுதான் படப்பிடிப்புக்கு வருவாங்க. ஆனால், ஜி.வி. பிரகாஷ் சார் பாதி சம்பளத்தைத் தான் வாங்கியிருக்கார்.
இந்தப் படத்தின் 8 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் நிதி நெருக்கடியினால் தடைப்பட்டிருந்தது. அப்படியான நேரத்தில், ஜி.வி. சார் கிட்ட நான், 'என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு.

நீங்க விட்டுக் கொடுத்தால் படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்திடுவேன்னு' சொன்னேன்.
அவர் யோசிக்காமல், உடனடியாக, 'உங்களுக்கு அது உதவியாக இருக்கும்னா, நான் நிச்சயம் விட்டுக் கொடுக்கிறேன்'னு சொல்லி, பாதி சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு படத்துல நடிச்சு, டப்பிங் பண்ணிக் கொடுத்து, இன்னைக்கு ப்ரோமோஷன் வரை வந்திருக்கார். அவருக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டிருக்கேன்," என்றார்.