"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குற...
H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு
சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் தடாலடியாக வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளில் ஹெச்-1பி விசா விலை ஏற்றமும் ஒன்று.
அமெரிக்காவின் இந்த விசாவை அதிகம் பெறும் இரு நாட்டினர் - இந்தியர்கள் மற்றும் சீனர்கள். ஹெச்-1பி விசா பெறுபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்களே.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய 'Make America Great Again' பிரசாரத்தின் படி, இந்த விசாக்களைப் பெற்று வரும் வெளிநாட்டினர் அமெரிக்காவினரின் வாய்ப்பைப் பறிக்கின்றனர்.

இந்த விசா மூலம் வரும் வெளிநாட்டினர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால், தகுதியுள்ள அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று இந்தத் திட்டத்திற்கு செக் வைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஹெச்-1பி விசாவின் கட்டணம் 1 லட்சம் டாலர்கள் என அறிவித்தது அமெரிக்க அரசு. 1 லட்சம் டாலர் என்பது தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.95 லட்சம்.
ஹெச்-1பி விசா என்பது பொதுவாக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவது ஆகும். அமெரிக்கர்கள் செய்ய முடியாத வேலையாக இருந்தால் மட்டுமே ஹெச்-1பி விசா வெளிநாட்டினருக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் இத்தகைய ஏற்பட்டைச் செய்தது ட்ரம்ப் அரசாங்கம்.
ட்ரம்ப் அரசாங்கத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியினர் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கிற்கான தீர்ப்பை நேற்று அமெரிக்காவின் பாஸ்டன் மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் வழங்கியுள்ளார்...

"ஹெச்-1பி விசா என்பது அபராதம் அல்ல. அது ஒரு வரி. ஆனால், அந்த விசா கட்டணத்தை உயர்த்த ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் அனுமதியைப் பெறவில்லை.
இதனால், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பால் இதை நடைமுறைப்படுத்த முடியாது.
இந்த உயர்வு என்பது ட்ரம்பின் அதிகார வரம்பைத் தாண்டியது. இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பொதுத்துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டண உயர்வு சட்டத்திற்குப் புறம்பானது" என்று தீர்ப்பளித்தார்.



.jpeg)












