செய்திகள் :

H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு

post image

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் தடாலடியாக வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளில் ஹெச்-1பி விசா விலை ஏற்றமும் ஒன்று.

அமெரிக்காவின் இந்த விசாவை அதிகம் பெறும் இரு நாட்டினர் - இந்தியர்கள் மற்றும் சீனர்கள். ஹெச்-1பி விசா பெறுபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்களே.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய 'Make America Great Again' பிரசாரத்தின் படி, இந்த விசாக்களைப் பெற்று வரும் வெளிநாட்டினர் அமெரிக்காவினரின் வாய்ப்பைப் பறிக்கின்றனர்.

ஹெச்-1பி விசா |H-1B visa
ஹெச்-1பி விசா |H-1B visa

இந்த விசா மூலம் வரும் வெளிநாட்டினர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால், தகுதியுள்ள அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று இந்தத் திட்டத்திற்கு செக் வைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஹெச்-1பி விசாவின் கட்டணம் 1 லட்சம் டாலர்கள் என அறிவித்தது அமெரிக்க அரசு. 1 லட்சம் டாலர் என்பது தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.95 லட்சம்.

ஹெச்-1பி விசா என்பது பொதுவாக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவது ஆகும். அமெரிக்கர்கள் செய்ய முடியாத வேலையாக இருந்தால் மட்டுமே ஹெச்-1பி விசா வெளிநாட்டினருக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் இத்தகைய ஏற்பட்டைச் செய்தது ட்ரம்ப் அரசாங்கம்.

ட்ரம்ப் அரசாங்கத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியினர் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கிற்கான தீர்ப்பை நேற்று அமெரிக்காவின் பாஸ்டன் மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் வழங்கியுள்ளார்...
ட்ரம்ப்
ட்ரம்ப்

"ஹெச்-1பி விசா என்பது அபராதம் அல்ல. அது ஒரு வரி. ஆனால், அந்த விசா கட்டணத்தை உயர்த்த ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் அனுமதியைப் பெறவில்லை.

இதனால், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பால் இதை நடைமுறைப்படுத்த முடியாது.

இந்த உயர்வு என்பது ட்ரம்பின் அதிகார வரம்பைத் தாண்டியது. இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பொதுத்துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டண உயர்வு சட்டத்திற்குப் புறம்பானது" என்று தீர்ப்பளித்தார்.

இஸ்ரேலின் முக்கிய நகரில் பிரமாண்ட சிவாஜி சிலை நிறுவப்படுகிறது! - பின்னணி என்ன?

இந்திய தலைநகர் புது டெல்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளின் ஒரு புதிய மைல்கல்லாக, இஸ்ரேலில் மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவு... மேலும் பார்க்க

சேலம்: `ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் தவெக MLA லட்சுமணன்' - தவெக அதியமான் கொளுத்திப் போட்ட பின்னணி?

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டவர் அதியமான். அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். நம்பி வாக்களித்த மக்களுக்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - 'சிங்கப் பெண் அதிரடிப் படை' திட்டம் இன்று தொடக்கம் | Live Updates

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென... மேலும் பார்க்க

தருமபுரி: ஆறு ஆண்டாக மக்கள் எதிர்க்கும் டாஸ்மாக்; மனமகிழ் மன்றமாக மாறியதற்கு தவெக எம்எல்ஏ காரணமா?

"ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு மறுபுறம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை த.வெ.க அரசு திறக்கிறது" என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அன்பு... மேலும் பார்க்க

இந்தியாக் கூட்டணி: ``பாஜக-வுடன் நாங்கள் கூட்டணியா?" - காங்கிரஸை உலுக்கும் CPM-ன் சரமாரி கேள்விகள்

இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ்... மேலும் பார்க்க