செய்திகள் :

Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்!

post image

''கோடை காலம், மழைக்காலம், பனிக்காலம் என பருவ நிலைகள் மாறும்போது, நம் உடலிலும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் உயிர் தாதுக்களில் மாற்றம் ஏற்படும்.  ஈரக்காற்றும், பனிக்காற்றும் மூக்கு மற்றும் காது வழியாக உடம்புக்குள் நுழைந்து தலைபாரத்தில் ஆரம்பித்து மூச்சிரைப்பு வரைக்கும் ஏற்படுத்தி விடும். தவிர, குளிருக்கு, வாதத்தை அதிகப்படுத்தி விடும் தன்மையும் உண்டு. அதனால்தான் மழை மற்றும் பனிக்காலத்தில் மூட்டு சார்ந்த பிரச்னைகளும் அதிகமாகின்றன. இவை வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம் என் விளக்குகிறார்  சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

மழைக்காலம்!

வராமலே தடுக்கலாம்!

குளிர்காலத்தில், நம்முடைய காதுகள் குளிர்க்காற்றை உள்ளிழுத்து கபாலத்தில் சேர்த்து விடும்.  இதனால், தலையில் நீர்க்கோத்துக் கொள்ளும். விளைவு, தலைபாரம். வண்டியில் வேகமாக செல்லும்போதும், வாகனங்களில் ஜன்னலோரம் உட்காரும்போதும் இந்தப் பிரச்னை அதிகமாகும். காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்வது அல்லது உல்லன் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையை வராமலே தடுக்க முடியும்.

ஈரக்காற்று, காது மற்றும் மூக்கு வழியாக சைனஸ் காற்றறைகளுக்குள் செல்கையில், மூக்கடைப்பும் தும்மலும் வரும். காதுகளையும் மூக்கையும் தொடர்ந்து மறைக்காமல் இருந்தால், நாள்பட நாள்பட இந்த ஈரக்காற்று நுரையீரலின் மேல் பகுதி வரைக்கும் சென்று விடும், கவனம்.

வருமுன் தடுப்போம்!

குளிர்காலம் நம் உடலுக்குத் தருகிற குளிர்ச்சியை குறைப்பதற்கான உணவுகளை சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு தூதுவளை ரசம், பச்சை சுண்டைக்காய், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, பிஞ்சுக் கத்தரிக்காய், பாகற்காய் என உடலில் சளி சேராமல் தடுக்கக்கூடிய காய்கறிகள், கீரைகளை சாப்பிடவும்.  இதையும் மீறி சளி பிடித்தால், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி போன்ற காரமான உணவுகளை சாப்பாட்டில் சேர்க்கவும்.  உடலுக்கு வெப்பம் தரும் அன்னாசி மற்றும் பப்பாளியை அதிகம் சாப்பிட வேண்டும். கோதுமை உடலுக்கு உஷ்ணம் தரும் தானியம் என்பதால், குளிர்காலத்தில் கோதுமை உணவுகளை அதிகம் சாப்பிடலாம். தவிர, மழை, பனி என குளிர்காலம் முழுக்க, முடிந்தவரை உணவை சுடச்சுட சாப்பிடுங்கள். வெந்நீர் மட்டுமே குடிப்பது நல்லது.

சுவைகளில் இனிப்பு, உப்பு, புளிப்பு தவிர்க்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு அதிகமாக்க வேண்டும். பாலுக்கும், தயிருக்கும், வெண்ணெய்க்கும் நோ சொல்லுங்கள். உருக்கிய நெய், தாளித்த மோர் என்றால் ஓகே. கேரட், பீட்ரூட், புளித்த மாவு உள்ளிட்ட  உடலை மந்தமாக்கும் உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.  

கூடவே, ஒரு டீஸ்பூன் 'திரிகடுகு சூரண'த்தை (சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்த) வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தாலும், சளி, இருமல் போன்ற பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம். இந்தச் சூரணம் மாத்திரையாகவும் கிடைக்கிறது.

தூதுவளை திப்பிலி ரசம்

இவை வேண்டவே வேண்டாம்!


குளிர்காலத்தில் ஆறிப்போய் ஜில்லென்று இருக்கிற உணவுகளையும், ஃபிரிட்ஜில் வைத்த பழைய உணவுகளையும் அறவே தவிருங்கள். ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள், சீஸ், பனீர் போன்றவற்றை உணவில் சேர்த்தால், சளித்தொல்லையை ஏற்படுத்தும். ஏற்கெனவே இருந்தால், அதை  இன்னும் அதிகப்படுத்தும்.

சளித்தொல்லையா ?

சளிப் பிடித்துவிட்டால் சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிவனார் அமிர்தம், தாளிசாதி சூரணம், தூதுவளை லேகியம், திப்பிலி ரசாயனம் ஆகியவற்றில் ஒன்றை சாப்பிட்டால் சரியாகி விடும்.

கபசுரக் குடிநீர்

3 பிரச்னை... 3 தீர்வு!

குளிர்காலத்தில் காய்ச்சல் வருவது சகஜம். இதற்கானத் தீர்வு நிலவேம்பு கஷாயம். சளிப்பிடித்துவிட்டால் கபசுரக்குடிநீர். நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிட சிரமமாக இருக்கிறதென்றால், அதை ஆடாதொடை குடிநீர் சரி செய்யும். மூன்று குடிநீரையும் தயாரிக்கும் முறை ஒன்றுதான். கால் லிட்டர் நீரில் 10 கிராம் சூரணம் போட்டு, நீரை நான்கில் ஒரு பங்காக வற்ற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். ஆடாதொடை குடிநீர்க்குப்பதில் ஆடாதொடை மணப்பாகும் சாப்பிடலாம்.

தொண்டை கரகரப்பா?

தாளிசாதி வடகம் அல்லது அதிமதுரம் சேர்க்கப்பட்ட கண்டக்குளிகையை வாயிலிட்டு சுவைத்து சாப்பிடலாம்.

மூக்கடைப்பா?

மூக்கடைப்பு இருக்கிறதென்றால், மிளகை தீப விளக்கில் சுட்டு, வெளியேறும் புகையை உள்ளிழுக்க வேண்டும். மஞ்சளையும் இதேபோல விளக்கில் சுட்டு புகையை உள்ளிழுத்தால் மூக்கடைப்பு சரியாகும்.  'புகையை உள்ளிழுப்பதா' என்று தயக்கமாக இருந்தால், சித்த மருத்துவர் ஒருவரை கலந்து ஆலோசியுங்கள்.

cold and fever

சைனஸ் தொல்லையா?

வீடு, ஆஃபீஸ், கார் என எங்கெங்கு காணினும் குளிர்சாதன வசதி என வாழ்ந்து வரும் இந்தக் காலத்தில், பெரும்பாலானவர்களுக்கு சைனஸ் தொல்லை இருக்கிறது. இவர்கள் சித்த மருத்துவர் ஆலோசனைப் பெற்று, திப்பிலி ரசாயனம், சிவனார் அமிர்தம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். சைனஸ் காரணமாக வருகிற தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரையை நீரில் குழைத்து பற்றுப்போட, வலி குறையும்.

செரிமானக் கோளாறு!

குளிர்காலத்தில் உடலின் உஷ்ணம் குறைவதால், செரிமானம் தாமதமாக நடக்கும். குளிர்காலத்தில் எதையாவது சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். இந்த இரண்டும் சேர்ந்துகொண்டு,  செரிமானக்கோளாறு ஏற்படும்.  சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டீஸ்பூன் அஷ்ட சூரணத்தை வாயிலிட்டு வெந்நீர் அருந்தினாலே இந்தப் பிரச்னை சரியாகி விடும்.  குளிர்காலம் முழுக்க கூடுமானவரை வெந்நீர்  அல்லது கிராம்பு போட்டு காய்ச்சிய நீரை அருந்தி வந்தால், செரிமானக் கோளாறு பிரச்னையே ஏற்படாது.

மூட்டுவலி

மூட்டுவலியும் மூட்டு வீக்கமும்...

பொதுவாக, மூட்டு ஜவ்வுகளில் வாயு சேர்ந்திருக்கும்.குளிர்காலம் நம் உடலில் வாய்வுப் பிரச்னையை அதிகப்படுத்தி விடும் என்பதால், மூட்டுகளில் வலி வர ஆரம்பித்து விடும். மூட்டுக்களில் வீக்கம் இருப்பவர்களுக்கு, இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாகும்.  இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு காலில் அடிக்கடி ஈரம் படக்கூடாது; வெறுங்காலுடன் தரையில் நடக்கக்கூடாது; தரையில் படுக்கக்கூடாது; மூட்டுகளில் குளிர்காற்று படும்படி முழங்கால்வரை ஆடை அணிவதும் கூடாது. கை, கால் முழுவதுமாக மறையும்படி ஆடைகள் அணிந்து, உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மூட்டுகளில் வீக்கம், வலி, விறைப்புத்தன்மை இருப்பவர்கள், வீக்கத்தின் மீது கற்பூராதி தைலம் அல்லது வாத சார தைலத்தைத் தடவி, வெந்நீரால் ஒற்றடம் கொடுக்க அவை மூன்றும் குறையும்.’’

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Doctor Vikatan: சர்க்கரைநோயை விரட்டுமா கருஞ்சீரகம்- ஓமம்- வெந்தயம் கலந்த பொடி?

Doctor Vikatan:கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்- இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து வறுத்துப் பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், வேறெந்த நோய்களும் அண்டாது என பலரும் சொல்கிறார்கள். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேப்பிலையும் மஞ்சளும் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் குணமாகிவிடுமா?

Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப்புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்தபுற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும... மேலும் பார்க்க

APOLLO: இந்தியாவில் முதன் முறையாக முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை

இந்தியாவில் முதன் முறையாக அப்போலோ கேன்சர் சென்டர் – ல் நாட்பட்ட வலிக்கான நிவாரண மேலாண்மையில் முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... Kawasaki பாதிப்பு.. தீர்வு என்ன?

Doctor Vikatan:என் நண்பனின் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செய்து எல்லா சோதனைகளும் செய்தார்கள். கடைசியில் கவாஸகி ( Kawasaki disease) என்ற பிரச்னை பாதித்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் 6 வயதுப் பேரனுக்கு காலையில் எழுந்தவுடன் நெஞ்சிலிருந்து கோழை கோழையாக வருகிறது. இருமல், மூக்கிலிருந்து சளி வருவது எதுவும் இல்லை. தினமும் காலையில் மட்டுமே கோழை பிரச்னை வருகிறது. இதற்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கமின்மை பிரச்னை.... தற்காலிகமாக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் வயது 45. கடந்த சில மாதங்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. இது என் இயல்பு வாழ்க்கையைப்பெரிதும் பாதிக்கிறது. தற்காலிகமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வதுதீர்வாக இருக்குமா... அது பழ... மேலும் பார்க்க