செய்திகள் :

Ind vs SA : கொட்டும் மழை; இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம்! - மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?

post image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்குவதில் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?

Ind vs SA
Ind vs SA

பெண்கள் உலகக்கோப்பையில் இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்துமே கோலோச்சியிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணி 7 முறையும் இங்கிலாந்து அணி 4 முறையும் வென்றிருக்கின்றன.

ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து இல்லாத ஒரு இறுதிப்போட்டி இதுவரை நடந்ததே இல்லை. ஆஸ்திரேலியா , இங்கிலாந்து தவிர்த்து நியூசிலாந்து மட்டுமே ஒரே ஒரு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதனாலயே இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்த இறுதிப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்தியாவுக்கு இது மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டி. ஏற்கனவே 2005, 2017 ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

இந்த இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. போட்டிக்காம டாஸ் 2:30 மணிக்கு போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவி மும்பையில் மழை பெய்து வருவதால் இன்னமும் டாஸ் போடப்படவில்லை.

Harmanpreet Kaur
Harmanpreet Kaur

ஒரு வேளை மழை தொடர்ந்தாலோ அல்லது இடையிடையே மழை குறுக்கிட்டாலோ என்ன நடக்கும்? இது இறுதிப்போட்டி என்பதால் இதற்கு ரிசர்வ் டே உண்டு.

அதனால் இன்று போட்டியை நடத்த முடியவில்லையெனில் நாளை நடத்துவார்கள். இந்தப் போட்டியில் ரிசல்ட்டை பெற வேண்டுமெனில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்களையாவது ஆட வேண்டும்.

20 ஓவர்களை கூட ஆட முடியவில்லையெனில் போட்டி ரிசர்வ் டேக்கு செல்லும். நாளையும் மழை பெய்து போட்டி நடக்கவில்லையெனில் கோப்பை இரு அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

Ind vs SA : அதிரடி காட்டிய ஷெபாலி, ரிச்சா; 300 யை நெருங்கிய இந்தியா! - கோப்பையை வெல்லுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்களை சேர்த்திருக்கிறது.India vs S... மேலும் பார்க்க

Ind vs SA : `நாங்களும் பௌலிங்தான் எடுக்க நினைச்சோம்!' - ஏமாற்றத்துடன் ஹர்மன்ப்ரீத் கவுர்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை தென்னாப்பிரிக்க அணி வென்றிர... மேலும் பார்க்க

``AC ரூம் கூட கொடுக்கமாட்டாங்க!'' -இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நவி மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும்... மேலும் பார்க்க

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிரு... மேலும் பார்க்க

Ind v SA: ``அந்த ஒரு விஷயத்துலதான் கவனமா இருக்கோம்!'' - இறுதிப்போட்டி குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாடீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்ட... மேலும் பார்க்க