Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
Ind vs SA : `நாங்களும் பௌலிங்தான் எடுக்க நினைச்சோம்!' - ஏமாற்றத்துடன் ஹர்மன்ப்ரீத் கவுர்
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுகிறது.

டாஸில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, 'நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். இது ஒரு முக்கியமான போட்டி. அதனால் முதலில் பேட் செய்வதும் நல்லதுதான். அழுத்தம் எதுவும் இல்லாமல் நல்ல ஸ்கோரை எட்ட முயற்சிப்போம். இன்றைக்கு எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் 5-6 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆட பிட்ச் அவ்வளவு சிரமமாக இருக்காது என நினைக்கிறேன்.
நாங்கள் இண்டண்டோடு பாசிட்டிவான மனநிலையை கொண்டு ஆட நினைக்கிறோம். அரையிறுதிக்கு பிறகு 2 நாட்கள் நன்றாக ஓய்வெடுத்திருக்கிறோம். இந்தப் போட்டிக்காக ஆர்வமாக காத்திருக்கிறோம்.' என்றார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா பேசுகையில், 'மழை பெய்திருக்கிறது. போக போக ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கக்கூடும். அதனால் முதலில் பந்துவீச நினைக்கிறோம். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்துக்கு முன்பாக ஆட ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் இருக்கிறோம்.' என்றார்.














