ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
IPL 2025: கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்... விராட் கோலியை முந்திய வீரர் யார்?
ஐ.பி.எல் 2025-கான மெகா ஏலம் நிறைவடைந்திருக்கிறது. பல ஆச்சரியங்கள் நடந்துள்ள இந்த ஏலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த நம் பார்வையை மாற்றுவதாக அமைந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பண்ட் 27 கோடிக்கு எடுக்கப்பட்டது புதிய சாதனை. அவரைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் முறையே 26.75 கோடி மற்றும் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். தக்கவைக்கப்படும் வீரராக விராட் கோலியை ஆர்.சி.பி அணி 21 கோடிக்குத் தக்கவைத்திருக்கிறது.
தற்போது ஐ.பி.எல் வீரர்களின் சம்பளத் தொகை தெரியவந்துள்ளது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் திகழ்கிறார். ஐ.பி.எல்-இல் மட்டுமே அவருக்கு 27 கோடி கிடைத்திருக்கிறது. அவரது பிற கிரிக்கெட் விளையாட்டு கமிட்மெண்ட்களை கணக்கிட்டால் முற்றிலும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மட்டுமே அவர் இந்த ஆண்டு 32 கோடி வருமானம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில் ஐ.பி.எல் மூலம்தான் பெரும் வருமானம் வருகிறது. பண்ட் இந்த ஆண்டு பி.சி.சி.ஐ-யின் 'ஏ' கேட்டகிரி ஒப்பந்தத்தில் இடம்பெறுவதனால், வருமானமாக 5 கோடி பெறுவார். மொத்தமாக 32 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் ஏ+ கேட்டகிரி ஒப்பந்தத்தில் இருக்கும் கோலிக்கு 7 கோடி சம்பளம் வழங்கப்படும். மொத்தமாக அவருக்கு 28 கோடி வருமானம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பண்ட் 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பி.சி.சி.ஐ-யின் முக்கியத் தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தில் அவருக்கு ஏ+ புரோமோஷன் கிடைக்கலாம். அப்படி நடந்தால் பண்ட்டின் சம்பளம் இன்னும் அதிகரிக்கும்.
மறுபுறம் கோலி இனி டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்பதனால் அவர் ஏ கேட்டகிரி ஒப்பந்தத்துக்குக் கொண்டுவரப்படலாம். இது அவரது சம்பளத்தைக் குறைக்கலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...