செய்திகள் :

Kalki 2898 AD படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்: காரணம் என்ன?

post image

கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Kalki 2898 AD

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. வருகின்ற பிப்ரவரி முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

தயாரிப்பு நிறுவனம் சொல்லும் காரணம்

கல்கி படத்தின் கதையே தீபிகாவைச் சுற்று நடக்கும் வகையில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்த நிலையில், அவர் திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "Kalki 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கமாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்.

மிகக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்துசெல்ல முடிவு செய்துள்ளோம்.

Deepika Padukone
Deepika Padukone

முதல் படத்தை உருவாக்கிய நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியாய் இணைய முடியவில்லை.

மேலும், ’Kalki2898AD’ போன்ற ஒரு படம் அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது.

நாங்கள் அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்" எனக் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே பிரபாஸ் படத்திலிருந்து நீக்கம்!

முன்னதாக சந்தீப் ரெட்டி வாங்காவின் படத்திலிருந்து தீபிகா வெளியேறியது சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபாஸ் நடிக்கவிருந்த ஸ்பிரிட் எனக் கூறப்பட்டது.

அதிலிருந்து தீபிகா விலகியபோது அவர் பெயரைக் குறிப்பிடாமல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சந்தீப் ரெட்டி வாங்கா.

இதனால் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா விலகியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

Anushka: "அருந்ததிக்குப் பிறகு வானம் படக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்" - அனுஷ்கா

இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் 'காட்டி' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்காக அனுஷ்கா அளித்த நேர்காணலில் தன்னுடைய தொடக்கக் கால... மேலும் பார்க்க

Mirai: "மதம் சார்ந்த படங்களிலேயே நடிக்கிறீர்களே?" - பத்திரிகையாளர்கள் கேள்விக்கு தேஜா சஜ்ஜா பதில்

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் 'மிராய்'. பான் இந்தியா மூவியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்... மேலும் பார்க்க

Balayya: "பாலய்யா பன்ச், POSITIVITY" - சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பாலய்யா; வாழ்த்திய ரஜினி!

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா), தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு படத்திற்கான விரு... மேலும் பார்க்க

Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!

நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தைவழிப் பாட்டியும் ராம் சரணின் தாய்வழிப் பாட்டியுமான அல்லு கனகரத்னம் இன்று காலை ஹைதராபாத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு 94 வயது. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு ... மேலும் பார்க்க

Balakrishna: `வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்...' - உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் பாலய்யா!

புகழ்பெற்ற தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வருமான நந்தமூரி தரக ராமாராவ் (N.T.R)-ன் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா. அரங்கேற்ற சிங்கம் (Natasimham), பாலய்யா என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்... மேலும் பார்க்க

நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நியூயார்க்கில் நடைபெற்ற 43-வது இந்திய தின அணிவகுப்பில் கை கோர்த்து நடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக... மேலும் பார்க்க