செய்திகள் :

Kerala: ``நான் தற்கொலை செய்தால் அரசுதான் பொறுப்பு'' - பாலியல் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

post image

சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. 'மலையாளத் திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை' தொடர்பான புகார்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மணியன்பிள்ளை ராஜு, இடைவேல பாபு தொடங்கி எம்.எல்.ஏ முகேஷ் வரை பலர் மீது பாலியல் புகார்கள் வந்தன. இந்த நிலையில், 51 வயதான நடிகை ஒருவர் தன் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதிகேட்க ஒரு பெண் முன்வந்தால், அந்தப் பெண்ணுக்கு அரசிடமிருந்து எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. என்னால் தாங்க முடியாத பல துன்பங்களை நான் அனுபவித்திருக்கிறேன்.

நடிகர் மணியன் பிள்ளை ராஜு - நடிகர் இடவேல பாபு

நான் மனதளவில் சோர்வடைந்துவிட்டேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவவோ, அல்லது பாதுகாப்பு வழங்கவோ அரசு முன்வரவில்லை. அதனால்தான் இந்த வழக்கை தொடர முடியாமல் பாதியிலேயே வாபஸ் வாங்குகிறேன். யாருடனும் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. நான் குற்றமற்றவள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் முன்வைத்த போக்சோ வழக்கு விரைவில் விசாரிக்க வேண்டும் என முறையிட்டேன். ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு அரசு தான் பொறுப்பு. நீதி வழங்கப்பட வேண்டும். என்னைப் போல் வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

AR Rahman: ஆடுஜீவிதம் படத்துக்காக HMMA விருதுபெறும் இசைப் புயல்!

கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்துக்காக HMMA விருதைப் பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் மீயூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (HMMA) என்பது திரைப்படம், டிவி நிகழ்ச்சி, வீடியோ கேம்கள், டிரெய்லர்கள்,... மேலும் பார்க்க

`இதான்டா சினிமா!' - ஒரே படத்தில் மம்முட்டி, மோகன் லால், ஃபகத் ஃபாசில்; இயக்குநர் யார் தெரியுமா?

மல்லுவுட் தற்போது ஒரு பெரிய புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணையவிருக்கிறார்கள்.`டேக் ஆஃப்', `சி யூ சூன்', `மாலிக்' போன்ற திரைப்படங்களி... மேலும் பார்க்க

``மிரட்டும் மிருகம்; காப்பாற்றும் மோகன்லால், பிரித்விராஜ்...'' - தொடர் கனவால் நவ்யா நாயர் கவலை!

தமிழில் ரசிக்கும் சீமானே, ராமன் தேடிய சீதை உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமானவர் நவ்ய நாயர். பரத நாட்டிய கலைஞரான இவர், தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியும், மலையாளப் படங்களிலும் நடித்து வர... மேலும் பார்க்க

Mollywood: நடிப்பதை நிறுத்தி விட்டு விவசாய வேலை... ஆடு மேய்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்..!

2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியானப் படம் ஹிருதயம். வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். அதற்கு முன்பும் பல படங்களில் அவர் நடித்திருந்தா... மேலும் பார்க்க

Mura Review: அதே நட்பு, துரோகம், அதிரடி; இந்த மலையாள `சுப்ரமணியபுரம்' மிரட்டுகிறதா?

உள்ளூர் தாதா அனி (சுராஜ் வெஞ்சரமூடு) அந்த ஊரில் செல்வாக்காக இருக்கும் தொழிலதிபரான ரெமாவுக்காக (மாலா பார்வதி) அடியாள் வேலை செய்கிறார். அவரிடம் வேலை வெட்டிக்குச் செல்லாமல் தான்தோன்றித்தனமாகச் சுற்றித் த... மேலும் பார்க்க