செய்திகள் :

Kingston: `சந்தோஷ் நாராயணனுக்கு அப்புறம் ஜி.வி.பிரகாஷ் என்னை சரியாக புரிஞ்சிக்கிட்டார்' - பா.ரஞ்சித்

post image
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் 'பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ்

இவ்விழாவில் பேசியிருக்கும் பா.ரஞ்சித், "இந்தப் படம் கடல், அட்வென்ச்சர் என நம்ம சினிமாவுக்கு புது ஜானர்ல வந்திருக்கு. எப்போதுமே புது ஜானர்ல படம் எடுக்கணும்னா நம்பிக்கையும், தைரியமும் வேண்டும். 'VFX', கிராபிக்ஸ் வைத்து சிறப்பாகப் படம் எடுப்பது ரொம்ப சவாலானது.

இந்தப் படத்தோடு காட்சிகளுக்கும், அதன் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லை. கொஞ்சமான பட்ஜெட்ல, ரொம்ப சூப்பராக படம் எடுத்திருக்காங்க. படத்தின் காட்சிகள் ரொம்ப சூப்பராக இருக்கு.

பா.ரஞ்சித்

ஜி.வி கிட்ட எந்தப் படத்தப் பற்றி பேசினாலும், 'கிங்ஸ்டன்' படம் பற்றித்தான் பேசுவார். அந்த டீம் மேல அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இவ்வளவு உழைப்ப போட்டிருக்க இந்தப் படத்தை எப்படியாவது மக்கள் கிட்ட கொண்டுபோய் சேர்த்திடணும்னு யோசிச்சிட்டே இருக்கார். படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு.

நம்ம நினைக்கிறத, யோசிக்கிறத சரியான ஒரு இசையமைப்பாளர்கிட்ட புரிய வைக்கிறது கஷ்டம். சந்தோஷ் நாராயணன் நான் நினைக்கிறத சரியா புரிஞ்சிக்குவாரு. அவருக்கு அப்புறம் ஜி.வியும் அத சரியாக புரிஞ்சுக்குவாறு. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் முதல் படத்தையே சிறப்பாக எடுத்திருக்கிறார்." என்று பேசியிருக்கிறார்.

Kayadu Lohar : கோலிவுட்டின் புதிய `அஸ்ஸாம்’ க்ரஷ் - யார் இந்த `டிராகன்’ கயடு லோகர்?

கோலிவுட்டின் புதிய `அஸ்ஸாம்’ க்ரஷ்கயடு லோகர்`டிராகன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Hip Hop Tamizha: `ஆதி அண்ணாவோட கமென்ட் புல்லரிக்க வச்சது!' - சுயாதீன இசை கலைஞர் கெளுத்தி

சுயாதீன இசை துறையில் அடுத்தடுத்து பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்இதோ அந்த வரிசையில் அடுத்ததாக உருவெடுத்திருக்கிறார் கெளுத்தி! 19 வயதான இந்த இளைஞர் சுயாதீன இசையில் அட்டிக்கல்சருடன் இணைந்துப் பாடல்க... மேலும் பார்க்க

Prabhu Deva: `இது நடனத்தையும் தாண்டியது' - மகனை அறிமுகப்படுத்தி பிரபு தேவா நெகிழ்ச்சி

பிரபுதேவாவின் டான்ஸ் கான்சர்ட் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தனுஷ், வடிவேலு உட்பட சினிமா நட்சத்திரங்களும் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். `ரெளடி பேபி' பாடலுக்கு தனுஷும் பிரபுதேவாவும் மே... மேலும் பார்க்க