செய்திகள் :

Leopard: நாய்களை வேட்டையாடத்தான் ஊருக்குள் நுழைகின்றனவா சிறுத்தைகள்?

post image

ரவு நேரங்களில், குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருகிற வீடியோக்கள் அடிக்கடி நம்முடைய கண்களில் பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சிறுத்தைகள் காடுகளிலிருந்து மனிதர்கள் வசிக்கிற ஊர்களுக்குள் வருவதற்கானக் காரணத்தை எழுத்தாளரும் சுற்றுச்சூழல் பரப்புரையாளருமான கோவை சதாசிவத்திடம் கேட்டோம்.

''சிறுத்தை முல்லை நிலத்தின் விலங்கு. காடும் காடு சார்ந்த இடமும்தான் முல்லை நிலம். காட்டில் சிறுத்தை வசிக்க, காடு சார்ந்த இடங்களில் மனிதர்கள் வசித்தனர். அந்த வகையில், மனித இனத்துக்கு நெருக்கமாக வாழ்ந்த ஒரு விலங்கு, சிறுத்தை. நீலகிரி, வால்பாறை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில்தான் சிறுத்தைகள் நடமாட்டம் அடிக்கடி நிகழும். இந்தப் பகுதிகளில் காட்டையொட்டி துண்டு துண்டாக நகரங்கள் இருக்கின்றன. நகரங்களில் இறைச்சிக்கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வைத்திருப்பார்கள் அல்லது மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். அதை மோப்பம் பிடித்தபடிதான் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைகின்றன. அப்படி ஊருக்குள் வந்துவிட்டால், வீட்டுக்கு ஒரு நாய் இருக்கும். நாய், சிறுத்தைகளுக்குப் பிடித்த உணவு. இறைச்சிக் கழிவுகளை சாப்பிட வருகிற சிறுத்தைகள் நாய்களையும் வேட்டையாடி விடும். இதைத்தான் பலரும், சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடவே மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதாக சொல்கிறார்கள். தவிர, சிறுத்தைகள் கோழிகளையும் வேட்டையாடும்.

சிறுத்தை

சிறுத்தைகள் பெரும்பாலும் மனிதர்களை தாக்காது. அப்படியே தாக்கினாலும் குழந்தைகளைத்தான் தாக்கும். வளர்ந்த மனிதர்கள் உட்கார்ந்திருந்தால், சிறிய அளவில் இருக்கும் இரை என்று நம்பி தாக்க வரும். ஆனால், நாம் நிற்கும்போது அதைவிட பெரிதாக இருப்பதால் தாக்க முயற்சி செய்யாது'' என்றவர், ''சிறுத்தைகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் இறைச்சிக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்'' என்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Nilgiri Tahr: ரேடியோ காலர் பொருத்தம்போது உயிரிழந்த வரையாடு; தற்காலிக தடை! - என்ன சொல்கிறது வனத்துறை?

நீலகிரி வரையாடு, தமிழ் மொழியின் பழம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் வரையாடு தமிழ் நிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான த... மேலும் பார்க்க

அன்று வேட்டையாட தெரியாத அப்பாவி; இன்று மனிதர்களை தாக்கும் வேகம் - சொம்பு மூக்கு முதலையின் சோகக்கதை

கோடை விடுமுறைகள்ல 'முதலைப்பண்ணை'யும் நம்மோட சுற்றுலாவுல ஓர் ஆப்ஷனா இருக்கும். அந்தளவுக்கு, வனவிலங்குகள் போலவே முதலைகள் பற்றியும் அறியும் ஆவல் மக்களுக்கு உண்டு.ஆனால், இதென்ன சொம்பு மூக்கு முதலை. பேரே ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: இயல்புநிலைக்குத் திரும்பிய தெய்வானை யானை; கால்நடை மருத்துவர்கள் சொல்வதென்ன?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலைதிருக்கோயில் வளாகத்தில் உலா வருவது வழக்கம்.இந்நிலையில், கடந்த நவம... மேலும் பார்க்க

அவள் மழை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க