செய்திகள் :

Live: Rain Alert: "அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம்" - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் என்னென்ன?

post image

7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்தப் புயலுக்கு `ஃபெங்கல்' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், நாளை (நவம்பர் 30) 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், ``ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரியில் நாளை 30ஆம் தேதி பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.

சென்னை பட்டினப்பாக்கம் கடல்

இதன் காரணமாக அடுத்துவரும் மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை 30-ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், டெல்டா மாவங்களில் ஒரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் கடல்

தரைக்காற்று எச்சரிக்கை பொறுத்தவரையில், இன்று முதல் நாளை வரை வட தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீச கூடும்.

சென்னை பட்டினப்பாக்கம் கடல்

நாளை புயல் கரையைக் கடக்கின்ற பொழுது சூறாவளி காற்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் மணிக்கு 70 - 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 351 மி.மீ" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Rain Alert: நெருங்கும் ஃபெங்கல் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை மையம் சொல்வதென்ன?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக (ஃபெங்கல்) மாறியிருக்கிறது. இப்புயல் நாளை (நவ. 30) பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க... மேலும் பார்க்க

Rain Alert: `புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மையம்!' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

இன்று காலை வானிலை மையம், "தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. அதன் வேகம் 10 கி.மீ இருந்து 9 கி.மீ ஆக குறைந... மேலும் பார்க்க

Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என்றும், அதன் வேகம் 10 கி.மீ இருந்து 9 கி.மீ ஆக குறைந்துள்ளது என்றும் வ... மேலும் பார்க்க

Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில... மேலும் பார்க்க

Rain Alert: இன்று `இந்த' மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை...`இங்கே' காலை 10 மணி வரை மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது‌.இதையொட்டி, நேற்று இரவு முதல் தமி... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் எத்தனை நாள்களுக்கு மழை நீடிக்கும்... எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும்? | Live

தனியார் வானிலை ஆர்வலர் சொல்வதென்ன?!சென்னையில் மீண்டும் மழைப் பொழிவு தொடங்கியிருக்கிறது. அடுத்த 4-5 நாட்களுக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை விட டெல்டா மாவட்டங்கள... மேலும் பார்க்க