ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Maharashtra: ``தேர்தல் முடிவை ஏற்க முடியாது; ஏதோ சதி நடந்திருக்கிறது” - தாக்கரே கட்சி புகார்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டபோது பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
மகாவிகாஷ் அகாடி மொத்தமுள்ள 288 தொகுதியில் வெறும் 60-க்கும் குறைவான தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது. ஆனால் மஹாயுதி கூட்டணி 217 தொகுதியில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றன. இத்தேர்தல் முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கருத்து தெரிவிக்கையில், ''இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க வாய்ப்பில்லை. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகின்றனர் என்று எங்களுக்கு தெரியும். இது மக்களின் முடிவு கிடையாது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. 120 தொகுதிகளுக்கும் மேல் பெற மஹாயுதி கூட்டணி என்ன செய்திருக்கிறது.
எப்படி 75 தொகுதிகளுக்கும் குறைவாக மகாவிகாஷ் அகாடி பெற்றது? அவர்கள் எங்களது தொகுதிகளை திருடிக்கொண்டனர். இத்தேர்தல் முடிவை பொதுமக்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மகாராஷ்டிரா மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் மெஷின் வைக்கப்பட்டு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் அணிகள் இந்த அளவுக்கு சீட் பெற முடியுமா? மகாராஷ்டிரா மக்களால் கூட இத்தேர்தல் முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை. வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தவேண்டும். வாக்குச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் முடிவை ஏற்க முடியாது. ஏதோ சதி நடந்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...