மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயி...
Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்!" - பகிர்கிறார் இயக்குநர்
மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மம்மூட்டி - விநாயகன் என இருவர் நடித்திருக்கும் கதாபாத்திரமும் படத்திற்கு மிக முக்கியமான பலம் என்பதால் முதலில் விநாயகன் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜை நடிக்க வைக்க முயற்சிகள் செய்திருக்கிறார் இயக்குநர் ஜிதின் கே ரோஸ்.
ஆனால், சில விஷயங்களால் அப்போது நடக்காமல் போனதாகவும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
'களம்காவல்' படத்தின் ப்ரோமோஷனுக்காக மலையாள யூட்யூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் இயக்குநர் ஜிதின் ரோஸ், "'களம்காவல்' திரைப்படம் இரு வலுவான கதாபாத்திரங்களுக்கு சம அளவில் இடம் கொடுக்கும் கதை.
விநாயகன் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்காக பிரித்விராஜுக்கு கதையைச் சொன்னபோது, மற்றொரு ரோலுக்கு மம்மூட்டிக்கு பொருத்தமாக இருப்பார் என்று அவர் பரிந்துரைத்தார்.

அவர் சொன்ன விஷயம்தான் ஏற்கனவே எங்கள் மனதிலும் இருந்தது.
ஆனால், அப்போது எம்புரான் மற்றும் பிற படங்களால் பிரித்விராஜ் பிஸியாக இருந்ததால், வேறு விருப்பங்களைத் தேட வேண்டியிருந்தது.
பின்னர் அந்த ரோலுக்கு விநாயகனை பரிந்துரைத்தது மம்மூட்டிதான்." எனக் கூறியிருக்கிறார்.


















