Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி
உடல்நலப் பிரச்னைகளிலிருந்து குணமாகி தற்போது படப்பிடிப்புகளிலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார் மம்மூட்டி.
சமீபத்தில் கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வு ஒன்றில் மம்மூட்டி கலந்து கொண்டிருக்கிறார்.

மம்மூட்டியின் உண்மையான பெயர் முகமது குட்டி இஸ்மாயில். அவருக்கு மம்மூட்டி எனப் பெயர் சூட்டியவர் குறித்து இந்த நிகழ்வில் அவர் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், " நான் மம்மூட்டி என்கிற பெயரை தேர்வு செய்யவில்லை. என்னுடைய கல்லூரி நாட்களில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில்தான் இந்த பெயர் எனக்குக் கிடைத்தது.
ஒரு நாள் நண்பர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது என்னுடைய பாக்கெட்டிலிருந்து என்னுடைய பர்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த பர்ஸை எடுத்துக் கொடுத்த நண்பர் ஒருவர் என்னுடைய அடையாள அட்டையைப் பார்த்தார்.
அவர் என்னிடம் முகமது குட்டி என்கிற பெயரைச் சுருக்கி 'உங்களுடைய பெயர் மம்மூட்டியா?' எனக் கேட்டார். அப்போதிருந்து நண்பர்கள் அனைவரும் என்னை மம்மூட்டி என அழைக்கத் தொடங்கினார்கள்.

அப்போது எனக்கு பெயர் வைத்தவர் இப்போது இங்குதான் இருக்கிறார். அவருடைய பெயர் சசிதரன். பலர் எனக்கு பெயர் வைத்த கிரெடிட்ஸை எடுத்துக்கொண்டார்கள். அதைப் பற்றி கட்டுரைகளும் செய்தித்தாள்களில் எழுதினார்கள்.
ஆனால் உண்மையில் எனக்கு மம்முட்டி எனப் பெயர் வைத்தவர் இவர்தான். நான் இவரை ஒரு ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன். பல ஆண்டுகளாக இவரை மறைத்து வைத்திருந்தேன்." எனப் பேசினார்.




















