செய்திகள் :

Mazagon Dock: `தமிழ்நாடு டு ஆந்திராவா... இங்கு என்ன பிரச்னை?' - தொழிற்துறை சொல்வதென்ன?

post image

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடு தற்போது ஆந்திரா பக்கம் திசை மாறுகிறதா என்கிற பரபரப்பு கேள்வி தற்போது தொழிற்துறையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் தூத்துக்குடியில் கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளம் கட்டுவதற்காக 'கைடன்ஸ் தமிழ்நாடு' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

அந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் ரூ.15,000 - 18,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்
மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்

இந்தக் கிரீன்ஃபீல்ட் கப்பல் தளம் 1,050 ஏக்கருக்கு பிளான் செய்யப்பட்டது. அங்கே 3 லட்சம் DWT (Deadweight Tonnage) வரையிலான மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் உற்பத்தி செய்வது தான் பிளான்.

இந்தத் திட்டத்தின் காலம் 10-12 ஆண்டுகள் ஆகும்.

ஆனால், இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு இன்னும் இடம் ஒதுக்காததால், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆந்திரா பக்கம் மெல்ல நகர்ந்துள்ளது என்பது தான் பரபரக்கும் செய்தி.

மசகான் நிறுவனம் தற்போது ஆந்திராவில் கிட்டத்தட்ட ரூ.29,000 கோடி மதிப்புள்ள கப்பல் கட்டும் தளத்திற்காக இடம் தேடி வருகிறது.

தமிழ்நாட்டில் பிளான் செய்த அதே திட்டத்தை, ஆந்திராவிற்கு எடுத்துச் செல்லும் போது, கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் கொண்ட மெகா கப்பல் கட்டும் தளமாக விரிவு செய்துள்ளது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பக்கம் ஒரு திட்டம் செல்வது தமிழ்நாடு தொழிற்துறைக்கு நல்லதல்ல என்கிற குரல்கள் எழுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு தொழிற்துறையின் சில முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம்...

"மத்திய கப்பல் அமைச்சகம் வழிகாட்டுதல் படி, இந்தியாவில் கப்பல் கட்டும் தளத்திற்கு 2,000 ஏக்கர் கட்டாயம் தேவை. ஆனால், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் கேட்பது என்னவோ 600 ஏக்கர் மட்டுமே.

ஷிப் பில்டர்ஸ்
ஷிப் பில்டர்ஸ்
மேலும், ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கேட்டுள்ள அதே நிறுவனத்தை மசகான் நிறுவனமும் கேட்கிறது. ஏற்கெனவே, ஹூண்டாய் உடன் அந்த இடத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதால், மசகான் நிறுவனத்திற்கு அதை கொடுக்கவும் முடியாது.

இன்னொரு பக்கம், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் மசகான் நிறுவனம் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால், 2,000 ஏக்கர் பிரச்னை வராது. ஆனால், இரு நிறுவனங்களுக்கு அது செட் ஆகவில்லை.

அதனால், வேறு சில நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். மசகான் நிறுவனம் கேட்கிற மாதிரியான இடத்தையும் பார்த்து வருகிறது. இரண்டும் கைகூடினால், தமிழ்நாட்டில் மசகான் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் பிரச்னை ஏற்படாது". என்கிறார்கள்.

இதனிடையே தமிழக தொழில்த்துறை அமைச்சர் கீர்த்தனா, இன்று தன் தென் கொரியா பயணத்தில் ஹுண்டாய் நிறுவன முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

த.வெ.க அலுவலக திறப்பு விழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள்? - சர்ச்சையில் தலைமையாசிரியர்!

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திம்மம்பட்டியில் த.வெ.க அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ( த.வெ.க) பழ... மேலும் பார்க்க

"'நோ கமென்ட்ஸ்' சொல்றதுக்கா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?" - தவெக அமைச்சரை விமர்சித்த சீமான்

சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலைப் பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த... மேலும் பார்க்க

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்... மேலும் பார்க்க

ஸ்டாலின் படத்துடன் வந்த திமுக மேயர்; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் த... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோவில்: "25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?" - நீதிபதி கேள்வி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் ச... மேலும் பார்க்க

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க