செய்திகள் :

MK Muthu: ``மு.க.முத்து மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்..'' - செல்வபெருந்தகை இரங்கல்

post image

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.

கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய மு.க முத்து  ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ’இங்கும் மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மு.க.முத்து
மு.க.முத்து

கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட  இவர்  நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார்.

அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

செல்வபெருந்தகை வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மு.க.முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

மு.க.முத்து
மு.க.முத்து

தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க.முத்து, பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.

அவரது மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'கூட்டணியைக் கலைக்கக் களத்தில் குதிக்கும் கட்சிகள்' - அனல் தகிக்கும் தமிழக அரசியல்களம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆளும் தி.மு.க அரசு ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அரியணையைப் பி... மேலும் பார்க்க

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? - செல்வப்பெருந்தகை பதில்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் விஜய்யும் நேரில் சந்திக்கவிருப்பதாக பரவி வரும் தகவல் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்... மேலும் பார்க்க

"எம்.பி-க்கள் வாடகை அலுவலகத்தில் இருக்கும் நிலை"- விசிக எம்.பி ரவிக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள்!

எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் முனைவர் ரவிக்குமார். ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிக்கை மூலம் கருத்தியல் தளத்திலும், களச் செயல்பாடுகளுக்கு மனித உரிமை இயக்கம் என சமூ... மேலும் பார்க்க

"அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பாமக MLA-க்கள் 3 பேர் & வழக்கறிஞர் பாலு சஸ்பெண்ட்" - ராமதாஸ்

பாமக-வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகனும் தலைவருமான அன்புமணிக்கு இடையே நிலவி வரும் கட்சி அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி த... மேலும் பார்க்க

புதுவை: "முதல்வர் ரங்கசாமி இறந்தால் அவரை சித்தராக வழிபடுவர்" - அமைச்சர் ஜான்குமார் சர்ச்சை பேச்சு

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் சேலம் அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோயில் கட்டி, தினம்தோறும் பூஜைகளும், அன்னதானமும் செய்து வருகிறார். அதனால் மு... மேலும் பார்க்க