செய்திகள் :

MK Muthu: கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மு.க.முத்து உடல்; அஞ்சலி செலுத்திய உதயநிதி

post image

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.

கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய மு.க முத்து  ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ’இங்கும் மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மு.க.முத்து
மு.க.முத்து

கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட  இவர்  நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.

அவரின் உடலுக்கு ஸ்டாலின், உதயநிதி ஆகியோர்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். மூத்த நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மு.க.முத்துவிற்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
மு.க.முத்துவிற்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

திமுகவினரும், திரையுலகினரும் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

MK Muthu: ஸ்டாலின் டு விக்ரம்... மு.க. முத்துவிற்கு கட்சியினர், குடும்பத்தினர் அஞ்சலி | Photo Album

MK Muthu: ``தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்'' - மு.க.ஸ்டாலின்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

மதிமுக: "திமுக-வை ஆதரிப்பதாக இருந்தால் எதற்குத் தனிக்கட்சி?" - வைகோவிற்கு திருப்பூர் துரைசாமி கேள்வி

மதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவைத் துரோகி என்று மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாள்களுக்கு முன் வெளிப்படையாகப் பேசினார்.... மேலும் பார்க்க

MK Muthu: ``மு.க.முத்து மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்..'' - செல்வபெருந்தகை இரங்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் ... மேலும் பார்க்க

MK Muthu: ``தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்'' - மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 77. இந்நிலையில், மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் தனது ... மேலும் பார்க்க

``பாஜக-வுக்குத்தான் மோடி தேவை, மோடிக்கு பாஜக தேவை அல்ல; 2029-ல் மோடியை..'' - பாஜக எம்.பி பளீச்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "75 வயதைக் கடக்கும் தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓய்வுபெற வேண்டும்" என்று சமீபத்தில் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.குறிப்பாக, பிரதமர் மோடிக்... மேலும் பார்க்க

மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசல... மேலும் பார்க்க