செய்திகள் :

Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்..." - கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன?

post image
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர்14) கங்குவா திரைப்படம் வெளியானது.

படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிகா, சூரி, சுசீந்திரன், இரா. சரவணன் உள்ளிட்ட சில திரைப்பிரலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மிஷ்கினும் பேசியிருக்கிறார்.

Kanguva | கங்குவா

எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் மிஷ்கின் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், " சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் அதிகப்படியான கோபத்துக்கு ஆளாகிறார்கள். அது அவர்களின் உரிமைதான். ஆனால் படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும். சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை. கங்குவா படம் பார்க்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தைப் பற்றி விமர்சனங்கள் வந்தது.

மிஷ்கின்

இன்னும் நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடன் சிவாஜி இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவக்குமார் என்ற ஒரு மனிதர் இருக்கிறார். எவ்வளவு முக்கியமான ஒரு மனிதர் அவர். அவருடைய வீட்டில் இருந்து வந்த இரண்டு குழந்தைகளும் ரொம்ப நல்லவர்கள். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை. என்னிடம் அவர்கள் கேட்டாலும் படம் பண்ணப்போவதில்லை. ஆனால் நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

Once Upon a Time in Madras Review: எல்லோரிடமும் வந்து சேரும் துப்பாக்கி; நிஜமாகவே சுடுகிறதா?

தன் சாதியின் மீது அதீத வெறி கொண்டவரான தலைவாசல் விஜய், தன்னுடைய மகள் பவித்ரா வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைப் பதிவுத் திருமணம் செய்யப்போவதை அறிந்து, பெரும் கோபத்துடன் அதைத் தடுக்க கிளம்புகிறார். புதிதா... மேலும் பார்க்க

Inbox 2.0 : Eps 30 - உதவி செய்யுற Hero-னாலே யாரு?! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 30 இப்போது வெளிவந்துள்ளது!முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

GV - Selvaragavan: `இது செல்வராகவனின் லவ் ஸ்டோரி!' - செல்வராகவனின் ஹீரோவாகிறார் ஜி.வி!

செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகனாகிறார் ஜி.வி. பிரகாஷ்!செல்வராகவான் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு `மெண்டல் மனதில்' எ... மேலும் பார்க்க