செய்திகள் :

Nayanthara: ``கர்மா அசலும் வட்டியோடும் வந்து சேரும்'' - நயன்தாராவின் பதிவு... மீண்டும் சர்ச்சை!

post image
‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியது தொடர்பாக நயன்தாரா - தனுஷ் இடையே சட்ட ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியான நடிகை நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் குறித்த 'Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் தனுஷின் 'wunderbar films' நிறுவனம் தயாரித்திருக்கும் ' ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளைப் பயன்படுத்தியதிற்கு இழப்பீடு கேட்டுள்ளார் தனுஷ். இதுதொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் 'wunderbar films' நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்த ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகள் பிரச்னைகள் குறித்தும் தனுஷ் குறித்தும் நயன்தாரா கடுமையாகத் தாக்கி வெளியிட்டிருந்த அறிக்கை கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்த, தற்போது தனுஷ் தரப்பில் நயன்தாராவிற்கு எதிராக தொடர்ப்பட்டிருக்கும் இந்த வழக்கு இருவருக்குமிடையேயான சர்ச்சையை இன்னும் சலசலப்பாக்கியிருக்கிறது.

நயன்தாரா. விக்னேஷ் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் தனுஷை குற்றம் சாட்டி கடிதங்கள் வெளியிட்ட போதிலும், இதுகுறித்து தனுஷ் எந்தவித விளக்கமோ, பதிலும் கொடுக்காமல், இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும்" என்று சூசகமாகப் பதிவிட்டிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Inbox 2.0 Ep 20: RJ Balaji - Sorgavaasal Special | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 20 இப்போது வெளிவந்துள்ளது.வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணி... மேலும் பார்க்க

Sorgavaasal Public Review | FDFS Review | RJ Balaji, Saniya Iyappan, Selvaragavan

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

Samantha: `Until...' - அப்பா ஜோசப்பின் மரணம்; உருக்கமாகப் பதிவிட்ட சமந்தா

தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தன் திரைத்திறமையை இந்தியா முழுவதும் கொண்டு சென்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.ஆனால், சமீபத்தில் உடல் நிலை பாதிப்பு, அவரைச் சுற்றி வலம்... மேலும் பார்க்க

Jason Sanjay: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ; வெளியான அப்டேட்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்ப... மேலும் பார்க்க

சொர்க்கவாசல் விமர்சனம்: சிஸ்டத்தைக் கேள்வி கேட்கும் சிறைச்சாலை சினிமா; ஆனால் இந்தச் சிக்கல்கள்?!

1999-ம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைக்குள் கலவரம் ஏற்பட்டதால், 45க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள். ஆட்சிக்கலைப்பு வரை கொண்டு செல்லும் இந்த கலவரத்தைப் பற்றி விசாரிக்க, இஸ்மாயில் (நட்டி) தலைமையில் விச... மேலும் பார்க்க

Thug Life: ``மணி சார் மிகவும் ஆழமான சினி உலகை உருவாக்குகிறார்" - தக் லைஃப் குறித்து அலி ஃபைசல்!

0மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக... மேலும் பார்க்க