Nayanthara: ``கர்மா அசலும் வட்டியோடும் வந்து சேரும்'' - நயன்தாராவின் பதிவு... மீண்டும் சர்ச்சை!
‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியது தொடர்பாக நயன்தாரா - தனுஷ் இடையே சட்ட ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியான நடிகை நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் குறித்த 'Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் தனுஷின் 'wunderbar films' நிறுவனம் தயாரித்திருக்கும் ' ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளைப் பயன்படுத்தியதிற்கு இழப்பீடு கேட்டுள்ளார் தனுஷ். இதுதொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் 'wunderbar films' நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
இந்த ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகள் பிரச்னைகள் குறித்தும் தனுஷ் குறித்தும் நயன்தாரா கடுமையாகத் தாக்கி வெளியிட்டிருந்த அறிக்கை கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்த, தற்போது தனுஷ் தரப்பில் நயன்தாராவிற்கு எதிராக தொடர்ப்பட்டிருக்கும் இந்த வழக்கு இருவருக்குமிடையேயான சர்ச்சையை இன்னும் சலசலப்பாக்கியிருக்கிறது.
நயன்தாரா. விக்னேஷ் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் தனுஷை குற்றம் சாட்டி கடிதங்கள் வெளியிட்ட போதிலும், இதுகுறித்து தனுஷ் எந்தவித விளக்கமோ, பதிலும் கொடுக்காமல், இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகி வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும்" என்று சூசகமாகப் பதிவிட்டிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...