செய்திகள் :

Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?

post image

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருமே இதில் முதலாவது இடத்தில் இடம்பெறவில்லை.

சச்சின் யாதவ்

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற கெஷோர்ன் வல்காட், 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ், மூன்றாவது இடத்தை குர்டஸ் தாப்சன் பிடித்திருக்கிறார்.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 8ஆவது இடத்தை மட்டுமே பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். மற்றொரு இந்தியரான சச்சின் யாதவ் 86.27 மீட்டர் தூறம் ஈட்டி எறிந்து 4வது இடத்தைப் பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது'- உலக சாதனைப் படைத்த உசைன் போல்ட் வருத்தம்

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் ... மேலும் பார்க்க

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?

'இந்தியா vs பாகிஸ்தான்'ஆசியக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.India vs... மேலும் பார்க்க

Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமி... மேலும் பார்க்க

FMI MiniGP: ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது உலகக்கோப்பை தான் - அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FMI மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில்... மேலும் பார்க்க

Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

மனித பரிமாணத்தின் பகுதியாகவே சமூக கட்டமைப்பு உருவாகிறது. நாகரிகங்களின் தொடக்கம் முதல் இந்த கட்டமைப்பு பல்வேறு நிலைகளில், பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான பொறுப்புகள் ஒவ்... மேலும் பார்க்க