Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரி...
November Releases: 'இந்த மாசம் செம்ம டிரீட் இருக்கு’ - வரிசைக் கட்டி நிற்கும் நவம்பர் ரிலீஸ் படங்கள்
இந்தாண்டு ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட பல படங்கள், வருட இறுதி வந்துவிட்டதால் இப்போது அடுத்தடுத்து ரிலீஸ் ரேஸுக்கு தயாராகி வருகின்றன.
எப்போதுமே ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முன்பே கணக்கிட்டு அதற்கேற்ப பிசினஸ் தொடங்கி அத்தனை வேலைகளையும் கவனித்து வருவார்கள்.
அப்படி இந்தாண்டுக்கு திட்டமிட்டப் பல படங்கள் இப்போது அடுத்தடுத்து ரிலீஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் கிட்டதட்ட 7 தமிழ் திரைப்படங்களில் வெளியாகி இருந்தது. இந்த வாரம் 'காந்தா' உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதத்திலேயே அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கிறது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா...
நவம்பர் 21 ரிலீஸ்:
மாஸ்க்:
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் வெளியாகிறது. கவினுக்கு கடந்த மாதம் 'கிஸ்' திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே அவர் நடிக்கும் மற்றொரு படம் வெளியாகிறது.
மிடில் க்ளாஸ்:
அக்செஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், முனீஸ்காந்த், விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. காமெடியனாக இத்தனை ஆண்டுகள் நம்மை எண்டர்டெயின் செய்த நடிகர் முனீஸ்காந்த் இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியிருக்கிறார்.

தீயவர் குலை நடுங்க:
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் தினேஷ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படங்களைத் தாண்டி பூர்ணிமா ரவி நடித்திருக்கும் 'எல்லோவ்' திரைப்படமும் 'இரவின் விழிகள்' திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நவம்பர் 28 ரிலீஸ்:
ரிவால்வர் ரீட்டா:
கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படமும் இம்மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
டார்க் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஜே.கே. சந்துரு இயக்கியிருக்கிறார்.

இந்தியன் பீனல் லா (ஐ.பி.எல்):
டிடிஎஃப் வாசன், கிஷோர், அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படங்களைத் தாண்டி தனுஷ் பாலிவுட்டில் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' படமும் 28-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மம்மூட்டியின் 'களம்காவல்' படமும் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதில் நீங்கள் எந்தப் படத்திற்கு வெயிட்டிங்! கமெண்ட் பண்ணுங்க மக்களே..!


















