செய்திகள் :

Office Romance-ல் இந்தியா 2வது இடமா... ஆய்வு சொல்வதென்ன?

post image

நவீன காலத்தில் அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் பழகி காதல் கொள்வது இயல்பானதாக மாறியிருக்கிறது. ஆனால் இது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலானதாக மாறியிருக்கிறது.

புத்திசாலித்தனமான உறவுகள் பற்றிய ஆஷ்லே மேடிசன் தளத்தின் சமீபத்திய சர்வதேச ஆய்வு, பணியிடத்தில் காதல் கொண்டவர்கள் அல்லது தற்போது உறவில் இருப்பதை ஒப்புக்கொள்பவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Indian Office
Indian Office

இந்த ஆய்வு YouGov உடன் இணைந்து 11 முக்கிய நாடுகளில் நடந்துள்ளது. இதில் மெக்சிகோ முதலிடம் பிடித்திருக்கிறது.

ஆய்வு நடந்த நாடுகள்

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இதில் 13,581 வயது வந்த நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

Dating

இந்தியாவில் Office Romance

இந்திய அலுவலக சூழல்களில் பணியிட எல்லைகள், நடத்தைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பணியிட காதல் என்பது சகஜமாகவே இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. 10ல் நான்கு இந்தியர்கள் பணியிடத்தில் டேட்டிங் செய்திருக்கலாம் அல்லது செய்துகொண்டிருக்கலாம் என்கிறது ஆய்வு.

மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 43 விழுக்காடு பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கின்றர், அதே நேரத்தில் 40 விழுக்காடு இந்தியர்கள் அதை கூறியுள்ளனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும், அங்கு இந்த எண்ணிக்கை 30 விழுக்காடு உள்ளது.

மேலும் ஒட்டுமொத்தமாக உலகில் இளைய தலைமுறையினர் பணியிட உறவு குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-24 வயதுடையோரில் 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் கேரியரை பாதிக்கக்கூடும் எனக் கருதுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.