Pakistan: பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல்... 20 பேர் பலி; 30 பேர் காயம் -பாகிஸ்தானில் நடந்தது என்ன?
பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட இன்று குறைவாக இருந்ததாகவும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb