ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிம...
PAN 2.0 : புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க என்ன தேவை... எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?!
QR கோடு, பொது பான் எண், விரைவு சேவை என்று பான் 2.0 திட்டம் சீக்கிரம் அமலுக்கு வரப்போகிறது. 'என்கிட்ட ஏற்கனவே பான் கார்டு இருக்கே...நான் என்ன செய்யணும்' என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுந்திருக்கலாம். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்...எங்கே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். வாங்க...
பான் 2.0 என்பது புதிய பான் அட்டை விநியோகிக்கும் திட்டம் அல்ல. இது நம்மிடம் இருக்கும் பான் அட்டையை அப்டேட் செய்யும் திட்டம் மட்டுமே. அதனால், ஏற்கனவே, பான் அட்டை இருப்பவர்கள் புதியதாக பான் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதில்லை...அப்டேட்டுக்கு விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது.
பான் 2.0-க்கு என புதியதாக ஒரு வலைதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகப்படுத்தியதும், அதில் கேட்கும் தகவல்களை கொடுத்து...ஆவணங்களை பதிவேற்றம் செய்து சப்மிட் கொடுத்து QR கோடுடன் கூடிய புதிய பான் அட்டை விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
என்ன விண்ணப்பம் வேண்டும்?
அடையாள சான்று: ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அட்டை.
முகவரி சான்று: பாஸ்புக், வாடகை பத்திரங்கள், கேஸ் சிலிண்டர் போன்ற பில்கள்.
பிறந்த தேதி சான்று: பிறப்பு சான்றிதழ், டி.சி, பாஸ்போர்ட்.
இந்த சான்றுகள் இப்போதைய தேதிக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்துகொள்ளுங்கள். ஏனெனில், இந்தத் தகவல்கள் தான் புதிய பான் அட்டையில் இடம்பெற உள்ளது. அதனால், எதவாது சான்று அப்டேட்டாக இல்லையென்றால், இப்போதே அப்டேட் செய்துவிடுங்கள்.