மாநில கலைத்திருவிழா: மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
Parenting: உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய 15 விஷயங்கள்!
1. 'முதல்ல உன்னை நீ லவ் பண்ணு' என்று பால பாடத்தை முதலில் கற்றுக் கொடுங்கள்.
2. 'தப்புப் பண்றது சகஜம்; அதுல இருந்து நீ பாடம் கத்துக்கிறதுதான் முக்கியம்' என்று சறுக்கும்போது தட்டிக் கொடுங்கள்.
3. 'பொய் சொல்றது கோழைத்தனம்' என்று எடுத்துச் சொல்லி தைரியத்தை வளருங்கள்.
4. 'மத்தவங்க சின்ன ஹெல்ப் பண்ணாலும் தேங்க்ஸ்' சொல்லக் கட்டாயம் பழக்குங்கள். 'உன் ஃபிரெண்ட் ஹெல்ப் கேட்டா கட்டாயம் செய்' என்று உதவி செய்யும் மனப்பான்மையையும் வளருங்கள்.
5. 'நீ ஒரு விஷயத்தை செஞ்சா அதுக்கான நல்லது கெட்டதுக்கு நீ தான் பொறுப்பு' என்று தப்பித்தல் மனப்பான்மையை வராமல் தடுங்கள்.
6. 'வீட்டுப்பாடம் செய்யாம ஸ்கூலுக்குப் போறது உனக்கு மரியாதைக் குறைவான விஷயம்' என்று சொல்லி தள்ளிப்போடும் மனப்பான்மையை முளையிலேயே கிள்ளி விடுங்கள்.
7. 'பாராட்டுக்கு காதுக் கொடுக்கிற மாதிரியே குறை சொன்னாலும் கவனமா கேளுங்க'' என்று வெற்றி, தோல்வியை சமமாகப் பார்க்கிற மனப்பான்மையை விதையுங்கள்.
8. 'நீ எதைப் பார்த்து பயப்படுறியோ அதை நேருக்கு நேராக ஃபேஸ் செய்' என்று தைரியத்தை வளர்த்து விடுங்கள்.
9. 'தெரியாமதானே செஞ்சே... இட்ஸ் ஓகே' என்று நண்பர்களின் சின்னச் சின்ன தவறுகளை மன்னிக்கக் கற்றுக் கொடுங்கள்.
10. தடுமாறுகையில், 'யாருமே பர்ஃபெக்ட் இல்லை' என்று யதார்த்தத்தை உணர்த்துங்கள்.
11. 'மத்தவங்களுக்கு நீ மரியாதைக் கொடுத்தா, அது உனக்குத் திரும்ப கிடைக்கும்' என்று கொடுத்துப் பெறும் வாழ்வியலை சொல்லிக் கொடுங்கள்.
12. 'தோல்வி அவமானம் இல்லை. செகண்ட் அட்டெம்ட் அசிங்கம் இல்லை' என்று உலகின் பொதுப்புத்தியில் இருந்து அவர்களை மீட்டெடுங்கள்.
13 . பிடிக்காத விஷயங்களுக்கும் தவறான விஷயங்களுக்கு நோ சொல்ல கற்றுக் கொடுங்கள்.
14. மற்றவர்களுடன் தன்னை கம்பேர் செய்யும் குணமிருந்தால் அதை முதலில் மாற்றுங்கள். 'நீ தனித்தன்மையானவன்' என்பதைப் புரிய வையுங்கள்.
15. அவர்கள் சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன முடிவுகளை அவர்களையே எடுக்க வையுங்கள்.
எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல்.
தூத்துக்குடிப் பின்னணியில் விரிகிறது கதை. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து சகோதரர்களிடையே ஹார்பரில் யார் கோலோச்சுவது என்பதில் பல ஆண்டுப் பகை. அவர்களும், அவர்களின் விசுவாச அடியாட்கள் இருவரும்தான் பிரதான பாத்திரங்கள். வேட்டை நாய்கள், எஜமானர்களால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்படுபவை. ஒரு சொடக்கில் எதிரே நிற்கும் ஆளின் கழுத்துக் கண்டத்தின் சதையைக் கவ்வத் தயாராக இருப்பவை. அடியாட்கள் சமுத்திரமும் கொடிமரமும், தங்கள் எஜமானர்களின் சொடக்குக்காகக் காத்திருப்பவர்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...