செய்திகள் :

Pawan kalyan: ``சனாதன தர்மத்தைப் பாதுகாக்க புதிய குழு ஒன்று தொடங்கப்படும்...'' -பவன் கல்யாண்

post image
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக புதிய கட்சிப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பவன் கல்யாண், திருப்பதி லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் மிகுந்த ஆவேசமான கருத்துகளைப் பேசி, திருப்பதியின் புனிதத்தை பரிசுத்தம் செய்யப் பூஜைகளெல்லாம் நடத்தியது பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதையடுத்து "இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' என்ற அமைப்பை நிறுவ வேண்டும்" என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின், பவன் கல்யாண்

'சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்' என பவன் கல்யாண் கூறியது மற்றொருமொரு சர்ச்சையைக் கிளப்ப, உதயநிதி ஸ்டாலின் அதற்கு 'பொறுத்திருந்து பாருங்கள்..." என்று கவுன்டர் அடித்து பேசியதெல்லாம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது பவன் கல்யாண், "சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் ‘நரசிம்ம வாராஹி படை’ புதிய அணியை தொடங்கவுள்ளோம். உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பவன் கல்யாண்

நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயத்தில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க