செய்திகள் :

PMK: ``வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு; படை திரள்வோம்'' - பாமக அன்புமணி ராமதாஸ்

post image

கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. சாதிவாரியான கணக்கெடுப்பு வந்த பிறகு இந்த அளவு மாற்றியமைக்கப்படும் என்று அப்போது கூறப்பட்டது.

ஸ்டாலின் அன்புமணி
ஸ்டாலின், அன்புமணி

இதையடுத்து "வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு." என்று கூறி, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்திருந்தார்.

அன்புமணி - ராமதாஸ் இடையேயான கருத்து மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு வரும் இந்த சமயத்தில் இருவரும் தனித்தனியாக தொடர்ந்து பாமக கூட்டங்களை நடத்தவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் தமிழக அரசியலில் சூடுபிடித்திருகின்றன.

இந்நிலையில் பாமக அன்புமணி ராமதாஸ், "வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1208 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும்.

அதன் தொடக்கமாகத்தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் நாளான இன்று, இடஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துகிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான்.

அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது. இதை மனதில் கொண்டு இன்று விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து' - கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதேசமயம் இந்த 'A... மேலும் பார்க்க

"ரப்பர் தொழிலார்களின் குறைகளை யாருமே கேட்கவில்லை; ஆனா..." - புதிய அதிகாரிக்கு தொழிற்சங்கம் பாராட்டு

தமிழ்நாடு அரசின் ரப்பர் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ரப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோத... மேலும் பார்க்க

சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி... மேலும் பார்க்க

`இந்த நாலு பேரையும் நிக்க வச்சு கேள்வி கேக்கணும்' - உயரதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டும் DSP

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மே... மேலும் பார்க்க