செய்திகள் :

Rahul Gandhi: ``துரோணர் ஏகலைவரின் கட்டை விரலை வெட்டியதுப்போல...'' - பாஜகவை சாடிய ராகுல் காந்தி

post image

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுக்கால இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "எனது கடந்த சில பேச்சுகளில் அபன் முத்ரா (காங்கிரஸின் கை சின்னம்) பற்றியும் அச்சமில்லாமை, உண்மை, அகிம்சை ஆகியவை பற்றியும் பேசியிருந்தேன். நமது அரசியலமைப்பு சட்டத்தை உலகிலேயே 'எழுதப்பட்ட மிக நீண்ட அரசியலமைப்பு சட்டம்' என்று கூறுகிறார்கள்.

சாவர்க்கரின் பேச்சு மீறல்

அந்த அரசியலமைப்பு சட்டம் 'ஒரே தேசம்' என்று தத்துவத்தை கொண்ட சில விஷயங்களை கொண்டுள்ளது. நமது அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் குரல்களையும், கொள்கைகளையும் கேட்கமுடியும். அது இந்த நாட்டின் நீண்ட ஆழமான பராம்பரியம் மற்றும் சிவன், குருநானக், புத்தர், மஹாவீர் ஆகியோரிடம் இருந்து வந்தது.

சாவர்க்கரின் பேச்சு மீறல்

நான் எனது பேச்சை பாஜக மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிகப்பெரிய தலைவரின் பேச்சில் இருந்து தொடங்க விரும்புகிறேன். "இந்தியர்களை குறித்து எதுவும் இல்லாதது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மோசமான விஷயம். வேதங்களுக்கு பிறகு இந்திய நாட்டில் மிகவும் வணங்கக்கூடியதாக இருக்கும் மனுஸ்மிருதி நமது பண்டைய காலத்தில் இருந்து நமது பராம்பரியம், நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது தேசத்தை போற்றுகிறது. இன்று அது தான் நமது நாட்டின் சட்டம்" என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனிஸ்மிருதி முந்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சாவர்க்கரின் பேச்சு மீறல்

ஆனால், இன்று நீங்கள் (பாஜக) இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி பேசுவது மூலம் உங்கள் தலைவர் சாவர்க்கரின் பேச்சை மீறுகிறீர்கள்.

`ஏகலைவரின் கட்டை விரல்'

1000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அடர்ந்த காட்டில் ஏகலைவரின் கட்டை விரலை துரோணாச்சாரியார் எப்படி வெட்டினாரோ, அப்படி இந்த அரசு இளைஞர்களின் கட்டை விரலை வெட்டுகிறது.

துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவரின் விரலை வெட்டினாரோ, அப்படி இப்போது தேசத்தின் கட்டை விரலை வெட்டுவதில் கவனமாக இருக்கிறது அரசு.

தாராவியை அதானியிடன் கொடுத்தப்போது, தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, நடுத்தர பிசினஸ்களின் கட்டை விரலை வெட்டியது. இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அதானியிடம் கொடுத்தப்போது இந்தியாவில் உள்ள நேர்மையான பிசினஸ்களின் கட்டைவிரலை வெட்டியது.

ராகுல் காந்தி

`சமூக, பொருளாதார சமத்துவம் இல்லை!'

சமூதாய மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லாமல் அரசியல் சமத்துவம் இருந்தால், அது அரசியல் சமத்துவத்தையே அழித்துவிடும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அது இப்போது அனைவருக்கும் முன்பாக இருக்கிறது. தற்போது அனைத்து அரசு நிறுவனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக சமத்துவமும் இல்லை, பொருளாதார சமத்துவமும் இல்லை.

அதனால் தான், அடுத்தது நாங்கள் 'சாதி கணக்கெடுப்பு' நோக்கி நகர்கிறோம். அதன் மூலம், இந்த தேசத்திற்கு நீங்கள் யாருடைய கட்டை விரலை வெட்டி உள்ளீர்கள் என்பதைக் காட்டுவோம்.

`மதம் ,வெறுப்பு...'

நமது அரசியலமைப்பு சட்டம் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றை அறவே மறுக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, சம்பாலில் இருந்து சில இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். ஐந்து அப்பாவி மக்கள் சுடப்பட்டதாக கூறினார்கள்.

நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தை நிறுத்துகிறீர்கள். நீங்கள் வெறுப்பை பரப்புகிறீர்கள். இது அரசியலமைப்பு சட்டத்தில் எங்கு எழுதியிருக்கிறது.

நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுகிறோம். ஆனால், பாஜகவின் புத்தகம் மனுஸ்மிருதி ஆகும்" என்று காட்டமாக பேசினார்.

கனமழை ஆய்வு: ``முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்!" -ஆவேசமான மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!

கடந்த இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பேரிடர் மீட்பு படையினர் ம... மேலும் பார்க்க

South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..!

கிட்டதட்ட 10 நாள்களுக்கு முன்பு, தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராண... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``எதற்கும் பயப்படமாட்டார்; ஒருமுறை அவரது வீட்டில் தாக்குதல்..." - வைகோ பேச்சு

இன்று காலை காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்...'' - நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ

சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு, நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பூ பேசியதாவது,"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நல்ல ... மேலும் பார்க்க

EVKS Elangovan: தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல்; நாளை இறுதி சடங்கு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல்... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``மகனை இழந்ததில் உடைந்த போயிருந்தார்; எனினும்..'' - ஸ்டாலின் இரங்கல் அறிக்கை

இன்று காலை உயிரிழந்துள்ள காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்... மேலும் பார்க்க