"நான் குப்பைகளைச் சாப்பிடுவேன்" - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா...
Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி, இன்று காலை 10 மணி வரை,
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுரை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம்.
கோவை, கடலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
நாளை தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.