விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஐடி பெண்... கணவர், மகள்கள் கண் முன் உயிரிழந்த சோக...
Rain Alert: `காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையலாம்' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னர், 'நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். ஆனால், அது வலுவடையாமல் காற்று அழுத்த தாழ்வுப் பகுதியாகவே நகரும்" என்று கூறியிருந்தது.
ஆனால், தற்போதைய அப்டேட்டின் படி, "நாளை உருவாக இருக்கும் காற்று அழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அடுத்து 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டை நோக்கி நகரலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
இன்று தென் மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள கணிப்பில், "இன்று விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.
வரும் திங்கள்கிழமை மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.
வரும் செவ்வாய்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் அதிக கன மழை பெய்யலாம்.
வரும் புதன்கிழமை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழை பெய்யும். விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்யலாம்.