செய்திகள் :

Rain: ``இதுவரை எந்த பிரச்னையும் இல்லை; வந்தாலும் சமாளித்துக்கொள்வோம்!'' - மு.க.ஸ்டாலின்

post image
தமிழ்நாட்டை ஃபெஞ்சல் புயல் நெருங்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "2, 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதனை முன்னிட்டு, மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தோம். பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.சென்னையை பொறுத்தவரை தண்ணீர் தேங்க கூடிய இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏதேனும் இருந்தாலும் அதனை சமாளித்துக்கொள்வோம் " என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Rain Alert: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை; நெருங்குகிறது ஃபெஞ்சல் புயல்|Exclusive Videos

ஃபெஞ்சல் புயல் Live Update - புயல் கரையை கடக்க தாமதமா...தாக்கம் நீடிக்குமா?!ஃபெஞ்சல் புயல் ஸ்பாட் அப்டேட்!கன மழையோடு காற்று...புதுச்சேரி என்ன நிலவரம்?!தொடரும் கன மழை...கோயம்பேட்டில் நிலவரம் எப்படி?!தே... மேலும் பார்க்க

Rain Alert : ஃபெஞ்சல் புயல் எதிரொலி; சென்னையில் விமான நிலையம், திரையரங்குகள் மூடல்!

சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையிலும், நாகையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந... மேலும் பார்க்க