ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது
Rajamouli: ̀ ̀என் படங்களில் பாகுபலி, RRR-ஐ விட எனக்குப் பிடித்த படம்..." - ராஜமெளலி ஓப்பன் டாக்
'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' போன்ற திரைப்படங்கள் மூலம் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குநராக மாறிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி.
அந்த வரிசையில் மகாபாரதக் கதையை 10 பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனக்குப் பிடித்த திரைப்படம் குறித்துப் பேசியிருக்கும் ராஜமெளலி, "நான் 'பாகுபலி' மற்றும் 'மாவீரன்' உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், 'நான் ஈ' திரைப்படம்தான் எனக்குப் பிடித்த திரைப்படம்.
எனது மற்ற திரைப்படங்களைவிட இப்படம்தான் எனக்கு மனதிற்கு நெருக்கமான திரைப்படம். நிறைய அனுபவங்களும், அழகிய நினைவுகளும் அப்படத்தில் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...